பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

'அந்தப் பெரிய மனுஷன்தான் கூப்பிட் டாருன்னா, என்ன தைரியமிருத்தா, இந்தப் பொட்டைக் கழுதைங்களும் மாந்தோப்புக்குப் போயிருக்கும்! நீ உன் பொஞ்சாதியை விசாரிச் சியா பக்கிரி??? என்று கேட்ட மாயாண்டியிடம், ‘'நீ உன் சம்சாரத்தைக் கேட்டியா?’ என்று திருப்பிக் கேட்டான் பக்கிரி சற்று சூடாக,

'என் பொஞ்சாதியைக் கேக்கச் சொல்ல நீ ஆருடா?’ என்றான் மாயாண்டியும்பதிலுக்கு.

டேய், நீங்க ரெண்டு பேரும் ஏண்டா இதுக்குப்போய் சண்டை போட்டுக்கறீங்க; அல்லா விஷயத்தையும் ஆறு முகத்தைக் கேட்டா, அவன் சொல்லறான். அவன் சம்சாரம்தானே இந்தக் கழுதைகளுக்கெல்லாம் லீடராம்'; என்று கூறி விட்டு, சிரித்தான் குப்பன்.

லீடர் மட்டுமில்லே குப்பண்ணே; நம்ம முதலாளிக்கு பூவாயிதான், ரைட் ஹாண்ட்” என்று ராமன் கூறவுமே; அத்தனை நேரம் மயக்க நிலையிலிருந்த ஆறுமுகம் அலறியபடி 'என்னடா சொன்னே சோமாறி...?? என்று பாட்டிலைச் சுழட்டிக் கொண்டு எழுந்தான். அதிலிருந்த மது அவன் தலைமீது கொட்டிக் கொண்டிருந்தது.

லேசாக மூண்ட சலசலப்பை அடக்கியபடி

தொளப்பன் ஆறுமுகத்திடம் சமாதானமாகக் க. வினான்.