பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

நெற்றி வேர்வை நெலத்தில சிந்தச் சம்பாதிச் சிக் கொண்டு வற்ற காசுக்கு கள்ளெ ஊத்திட்டு; நீ பாலாக் குடிச்சு கொழுத்துப்போய் நிக்கறே! எங்க தாலியை அறுத்து உன் பெஞ்சாதிக்கு நகையும் தட்டும் பண்ணிப்போடறே, குடிக்க வந்தவன் குடிசையைப் பிடுங்கி; நீ மாடி விடு கட்டிக்கிட்டே. எங்களுக்கு எதுக்கு, உனக்கில்லியா ஐயா போலீசு வரணும்.

வேறெ எந்தத் தொழில் பண்ணினாலும், இப்படிக் கொள்ளையடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தானேய்யா, நீ இதுக்கும் போய் லைசென்ஸ்ளல" வாங்கியிருக்கே. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லறோம்; நெசம்னு முடிஞ் சிக்கோ. நீ உருப் பட மாட்டே. எங்க வயத் தெரிஞ்சு சம்பாதிச்ச காசு உனக்கு ஒட்டாது; உன் பெண்டாட்டி புள்ளங்க நல்லா இருக்க மாட்டாங்க’’, என்று ஒரு கொடிய சாபம் போல் பொன்னி பட பட வென்று பேசிக்கொண்டிருக்கும் போது அருகி லிருந்த காடையன், பளார்’ என்று பொன் னியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான்.

இதைச் சற்றும் எதிர்பாராத பூவாயி பதறிப் போனாள். அவளுள் கு டி கொண்டிருந்த பொறுமை இடம் பெயர்ந்து, அங்கு ஒரு பிரளயமே உருவாவது போல், கோபம் பொங்கி எழுந்தது. ஆனால்