உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பால் பாயசம்

16. மூன்று விருந்துகள்

சுஜாதை ஒரு நாள் காலை சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண் டிருந்தாள். குடம் நிறையப் பாலைக் கறந்து நுரை பொங்கப்பொங்கக் குடத்தைச் சமையல் அறைக்குக் கொண்டு வந்தாள். தண்ணீர் இல்லாமலே, முழுதும் பாலினாலேயே பாயசம் சமைக்க முற்பட்டாள். சுஜாதை, சேனானி கிராமத்துத் தலைவனுடைய மகள். மூன்று ஆண்டு களுக்கு முன்பு, தான் மணமாகாத கன்னிகையாக இருந்தபோது, தன் கிராமதேவதைக்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டாள். தனக்கு உகந்த கணவன் வாய்த்து, முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்குமானால், அந்தத் தெய்வத்திற்குப் பால் பாயசம் படைப்பதாக அவள் நேர்ந்து கொண்டாள். சேனானி கிராமத்துக்கு அருகிலே உள்ள அஜபால ஆலமரம் என்னும் ஆலமரத்தில் ஏதோ ஒரு தேவதை இருக்கிறதென்பதும், அதைப் பிரார்த்தித்துக் கொண்டால், அத் தேவதை தங்கள் குறைகளைத் தீர்த்து வேண்டிய வரங்களை அளிக்கும் என்பதும் அந்தக் கிராமத்து மக்கள் நம்பிக்கை. அந்தக் கருத்துப்படி சுஜாதையும் ஆலமரத்துத் தெய்வத்தை வேண்டினாள். அவள் எண்ணப்படியே அவளுக்கு உகந்த கணவன் வாய்த்துத் திரு மணமும் முடிந்து, அடுத்த ஆண்டிலே ஓர் ஆண் குழந்தையையும் பெற் றெடுத்தாள். தன் விருப்பம் நிறைவேறவே, அந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனையைச் செலுத்தப் பால் பாயசம் சமைத்துக் கொண்டிருந் தாள். அன்று வைகாசித் திங்கள் முழு நிலா நாளாகிய வெள்ளுவா நாள்.

நீர் கலவாமல் முழுவதும் பாலினாலே பாயசத்தைச் சுவைபடச் சமைத்தாள். பிறகு, தன் தோழிகளையும் பணிப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு, பாயசப் பாத்திரத்தைத் தானே தன் கையில் ஏந்திக்கொண்டு அஜபால ஆலமரத்தை நாடிச் சென்றாள். அந்த மரம் கிராமத்திற்கு அப்பால் காட்டிற்கு அருகிலே இருந்தது.

புத்த ஞானத்தை நாடி இல்லறத்தை விட்டுத் துறவறம் பூண்டு காடுகளையும் நாடுகளையும் சுற்றித் திரிந்த சித்தார்த்தர், அந்தக் காலத்தில் சேனானி கிராமத்தை அடுத்த காட்டிலே நேரஞ்சர