உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

யளிக்கவில்லை. தன்னுடைய இசையைப் பாராட்டாமலும் ரசிக்காமலும் இருந்ததைக் கண்டு முகிலன். இவர்கள் இசையறியாத மூடர்கள் போலும் என்று தனக்குள் கருதினான். நரம்புகளைத் தளர்த்தி வாசித்தான். அப்பொழுதும் அந்த இசை அவர்கள் மனத்தைக் கவர வில்லை. அவர்களால் அவனுடைய இசையை ரசிக்க முடியவில்லை. அப்போது அவன் அவர்களைக் கேட்டான். “நீங்கள் ஏன் என்னுடைய இசையை ரசிக்காமலிருக்கிறீர்கள். இது உங்கள் காதுக்கு இனிக்க வில்லையா? உங்கள் மனத்தைக் கவரவில்லையா?'

66

'நீர் இசை வாசித்தீரா! நரம்பைச் சுருதி கூட்டினீர் என்றல்லவா எண்ணினோம்.”

“என்னுடைய இசையை யறிந்து பாராட்ட உங்களுக்குப் போதிய அளவு இசையறிவு இல்லை என்று கூறுகிறேன். இதைவிட இனிமையான சிறந்த இசையை நீங்கள் கேட்டிருக் கிறீர்கள்?'

"நாங்கள் காசி நகரத்துப் பேர்போன இசைப்புலவரான குட்டில் ருடைய தேவ கானத்தைக் கேட்டிருக்கிறோம். அந்த இசை எங்கே, உம்முடைய இசை எங்கே! குழந்தையின் அழுகையை நிறுத்தப் பெண்கள் பாடும் பாட்டுப் போல இருக்கிறது உம்முடைய இசை.

இதைக் கேட்டு முகிலன் "அப்படியா!” என்று அதிசயப் பட்டான். “காசியில் இருக்கும் குட்டிலப் புலவரை நான் பார்க்க விரும்புகிறேன். இதோ நீங்கள் கொடுத்த உங்கள் காசைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் காசிக்குப் போகும் போது என்னையும் தயவு செய்து உங்களோடு அழைத்துக் கொண்டு போகவேண்டும்.” என்று அவன் அவர்களைக் கேட்டுக்கொண்டான். அவர்களும் இவன் வேண்டுகோளுக்கு இணங்கினார்கள். வாணிகச் சாத்தர் காசிக்குத் திரும்பி வந்தபோது முகிலனையும் கூட்டிக்கொண்டு வந்து குட்டிலப் புலவரின் வீட்டைக் காட்டிச் சென்றார்கள்.

குட்டிலப் புலவரின் வீட்டுக்கு முகிலன் சென்றபோது இசை வாணர் வீட்டில் இல்லை. வயது சென்ற அவருடைய தாய் தந்தையர் மட்டும் வீட்டிலிருந்தார்கள். முகிலன் அங்கு வந்ததைக் கண் பார்வை யற்றிருந்த அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை. சுவரின் மேலே முனையில் மாட்டித் தொங்கவிட்டிருந்த யாழைக்கண்டு முகிலன் அதைக் கையில் எடுத்து வாசித்தான். யாழ் ஒலியைக்கேட்ட அவர்கள், எலி யாழ் நரம்பைக் கடிக்கிறது போலும் என்று கருதி 'சூ....சூ உஸ்