உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

121

உஸ்' என்று துரத்தினார்கள். முகிலன் யாழை இருந்த இடத்தில் வைத்து விட்டு அவர்களிடத்தில் வந்து அவர்களை வணங்கினான். தான் குட்டிலப் புலவரைக் காண வந்ததைத் தெரிவித்தான். ‘எங்கள் மகன் வெளியே போயிருக்கிறான். விரைவில் வந்து விடுவான்' என்று அவர்கள் கூறினார்கள்.

وو

குட்டிலக் கலைஞன் வீட்டுக்கு வந்தபோது புதியவன் இருப்பதைக் கண்டு "நீ யார்? எங்கிருப்பவன், எதற்காக வந்தாய் என்றுகேட்டான். தான் உச்சயினி நகரத்தவன் என்றும் தன்னுடைய பெயர் முகிலன் என்றும் குட்டிலனிடம் இசை பயில வந்ததாகவும் முகிலன் கூறினான். புருஷ லக்ஷணங்களை அறியும் கலை பயின்ற குட்டிலன் முகிலனை அடி முதல் தலை வரையில் நோக்கி அவனுடைய அங்க அடையாளங்களைக் கண்டு, தனக்குள் ‘இவன் நல்லவன் அல்லன்' என்று கருதினான். “இசைக்கலை உனக்குத் தகுந்த கலையன்று, நீ போகலாம்' என்றுசொல்லி அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்தான். அது கேட்ட முகிலன் மனம் வருந்தினான். அவன் குட்டிலனுடைய பெற்றோரின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு ‘என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு இசை கற்பிக்கும்படி உங்கள் மகனுக்குக் கூறுங்கள்' ப என்று அவர்களை வேண்டிக்கொண்டான். அவனுடைய வேண்டுகோளுக்கு மனமிரங்கிய பெற்றோர், அவனுக்கு யாழ் வித்தையைக் கற்பிக்கும்படி தங்கள் மகனாகிய குட்டிலனுக்குக் கூறினார்கள். பெற்றோர் சொல்லை மறுக் காதவனாகையினால் குட்டிலன் முகிலனைச் சீடனாக ஏற்றுக் கொண்டு அவனுக்கு யாழ் வித்தையைக் கற்பித்தான். குட்டிலன் தான் கற்றறிந்த இசைக்கலைகளை எல்லாம் ஒன்றையும் மறைக்காமல் கற்றுக்கொடுத்தான். யாழ் வாசிக்கும் நுட்பங்களை யெல்லாம் விளக்கமாகத் தெரிவித்தான். சில மாதங் களுக்குள் முகிலன் தேர்ந்த இசைக் கலைஞனானான். “நான் அறிந்த வித்தைகளை யெல்லாம் உனக்குக் கற்பித்துவிட்டேன். இனி உனக்குக் கற்பிக்க ஒன்றுமில்லை” என்று குட்டிலன் தன்னுடைய சீடனுக்குக் கூறினான்.

குட்டிலன் கருதியது போல முகிலன் நல்லவன் அல்லன். இசைக் கலைகளைக் கற்றுத்தேர்ந்த அவன் தன்னுடைய குருவுக்குத் துரோகம் செய்ய எண்ணினான். அவனுடைய சுயநல வேட்கை, அவனுடைய ஆசிரியனுக்குத் துரோகம் செய்யத் தூண்டியது. ஒரு நாள் முகிலன் குட்டிலனுடன் அரண்மனைக்குப் போனான். பிரமதத்த அரசன் குட்டிலனை “இசைவாணரே! இவன் யார்?” என்று வினவினான்.