உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

“அரசர் பெருமானே! இவன் அடியேனுடைய மாணவன். முகிலன் என்பது இவனுடைய பெயர்” என்று விடை கூறினான் இசை வாணன். பிறகு அடிக்கடி முகிலன் இசைவாணருடன் அரண் மனைக்குப் போய்க்கொண்டிருந்தான். பிறகு அவன் அரசனுக்கு அறிமுகமானான்.

முகிலன் தனக்குள் எண்ணினான்: 'இசைக் கலையில் நான் தேர்ந்தவனாய்விட்டேன். என்னுடைய ஆசிரியர் கிழவர் ஆகி விட்டார். நான் அரண்மனையில் இசைப் புலவராக அமர்ந்து அரசாங்கப் புலவராக இருப்பது எவ்வளவு மேன்மையானது! இந்தக் காசிமாநகரம் பாரத நாட்டின் தலைநகரம். இந்த நகரத்தின் இசைப் புலவராக இருப்பது எவ்வளவு சிறப்பு! இவ்வாறு எண்ணிய முகிலன் ஒரு நாள் தன்னுடைய ஆசிரியரிடங் கூறினான்: “ ஐயா நான் அரண்மனையில் ஊழியஞ்செய்ய விரும்புறேன்” என்றான்.

66

“நல்லது இதுபற்றி அரசர் பெருமானிடம் கூறுகிறேன்” என்றார் நல்லவராகிய ஆசிரியர். அவர் அரசனைக் கண்டு, “அடியேனுடைய மாணவன் அரண்மனையில் இசைப் புலவனாக ஊழியஞ்செய்ய விரும்புகிறான். அவனுடைய ஊதியம் எவ்வளவு என்பதைத் தெரிவித்தருள வேண்டும்" என்று கேட்டார்.

"உம்முடைய ஊதியத்தில் செம்பாதியாக இருக்கும் உம்முடைய மாணவனுடைய ஊதியம்" என்றார் அரசர் பெருமான்.

சிரியர் இதைக் தம்முடைய சீடனிடத்தில் கூறினார். அது கேட்ட அவன், "தாங்கள் பெறுகிற ஊதியம் எவ்வளவோ அவ்வளவு ஊதியம் எனக்கும் கிடைக்க வேண்டும்" என்று கூறினான்.

66

"TOOT? ஏன்?”

"தாங்கள் கற்ற வித்தைகளையெல்லாம் நானுங் கற்றிருக் கிறேன் அல்லவா?”

66

ஆமாம். நான் அறிந்த இசைக் கலைகளையெல்லாம் நீயும்

அறிவாய்.

66

وو

ஆ கவே, தாங்கள் பெறுகிற ஊதியத்தின் அளவு ஊதியம் நானும் பெற வேண்டும்."