உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

-

123

குட்டிலப் புலவர் இவனுடைய கருத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசர், “உம்மைப் போல முழுக் கலையையும் உம்முடைய மாணவர் அறிந்திருந்தால் முழு ஊதியம் பெறட்டும்” என்று கூறினார். பிறகு அரசர் பெருமான் முகிலனை அழைத்து, “உம்முடைய ஆசிரியருக்குச் சமமாக ஊதியம் பெற விரும்புகிறீர். அவரைப்போல நீர் இசைக் கலையில் முழு ஆற்றல் பெற்றிருக்கிறீரா?” என்று கேட்டார்.

66

அதற்கென்ன ஐயம். அரசர் பெருமான் விரும்பினால் இசைப் போட்டி நடத்திப் பாருங்கள்” என்று கூறினான் முகிலன்.

"ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இசைப் போட்டியா!” என்று கூறி அரசர் பெருமான் அதிசயப்பட்டார். இவன் நல்லவன் அல்லன் என்பதை அரசரும் அறிந்தார்.

முகிலன் கூறினான்: “பெருமான் அடிகளே! எனக்கும் என்னுடைய ஆசிரியருக்கும் இசைப்போட்டி நடக்கட்டும். எங்களில் தேர்ந்த கலைஞர் யார் என்பதை உலகம் அறியட்டும்.'

66

இவ்வாறு முகிலன் கூறிச் சென்ற பிறகு. அரசர் பெருமான் குட்டிலப் கலைவாணரை அழைத்து முகிலன் அவருடன் இசைப் போட்டி நடத்த விரும்புவதைக் தெரிவித்தார். அது கேட்ட அவர் அவன் இசைப் போட்டி நடத்த விரும்பினால் நானும் அதற்கு இசைகிறேன்” என்று கூறினார். இருவரும் இசைப் போட்டிக்கு உடன்பட்ட படியால், பிரமதத்த அரசன் முரசு அறைவித்து இசைப் போட்டி அரங்கம் நடக்கப் போவதை நகரமக்களுக்கு அறிவித்தார்.

நகர வீதிகளில் முரசு முழங்கிற்று. “காசி நகரத்தில் வாழும் பெருமக்களே, கேளுங்கள்! இன்று ஏழாம் நாள் குட்டிலராகிய இசை யாசிரியருக்கும் அவருடைய மாணவராகிய முகிலருக்கும் இசைப் போட்டி அரங்கு அரண்மனையில் நடக்க இருக்கிறது. யார் இசைக் கலையில் சிறந்தவர் என்பதை அன்று சபையில் அறியலாம். நகரப் பெருமக்கள் வந்து காணுங்கள்” என்று நகர மக்களுக்கு அறிவிக்கப் பட்டது.

குட்டிலக் கலைஞர் தமக்குள் எண்ணினார்: ‘முகிலன் இளைஞன். தெம்பும் துடிப்புமுள்ளவன். நானோ கிழவன், வலிமையற்றவன், தெம்பு இல்லாதவன். கிழவன் செய்யுங் காரியங்கள் போற்றப்படமாட்டா. போட்டியில் என்னுடைய மாணவன் தோல்வியடைந்தால், அதனால்