உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

129

கேசியிடமிருந்து தன்னை விடுவித்த புரூரவசுவின் மேல் ஊர்வசிக்கு நன்றியுணர்ச்சியும் அன்பும் ஏற்பட்டது. அவள் அவனுக்கு நன்றி கூறினாள். பிறகு நாளடைவில் அவளுடைய நன்றியுணர்ச்சி காதலாக வளர்ந்தது. ஊர்வசி புரூரவசுவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அதை அவள் வெளிப்படையாகவும் தெரிவித்தாள்.

இந்திர சபையில் நாட்டிய நடனங்களும் ஆடல் பாடல் களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. இசை நாடக ஆசிரியராகிய பரதர் புதிய புதிய நாடகங்களையும் இசைப் பாட்டுகளையும் அமைத்து அரங்க மேடையில் நிகழ்த்திக் காட்டுவார். இந்திரனும் தேவர்களும் அவற்றைக் கண்டும் கேட்டும் மகிழ்வார்கள். பரதர் புதிதாக ஒரு நாட்டிய நாடகத்தை எழுதி அமைத்தார். அதன் பெயர் 'இலக்குமியின் திருமணம்' என்பது. இலக்குமி விஷ்ணுவின் மேல் காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டதாக அந்த நாட்டிய நடனம் அமைந்திருந்தது. இந்தப் புதிய நாட்டிய நாடகத்தை நடத்திக் காட்டும் படி தேவேந்திரன் பரதனிடம் கட்டளையிட்டான். இந்த நாட்டிய நாடகத்தைப் பார்ப்பதற்கு தேவர்கள் இந்திர சபையில் வந்து கூடினார்கள். புரூரவசு அரசனும் பூலோகத்திலிருந்து இந்திர லோகத்துக்குச் சென்று இந்திரனுக்கு அருகில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நாடகம் தொடங்கிற்று. பரதன் இசை பாடினார். யாழ், குழல், முழவு, தாளங்கள் ஒலித்தன. மேனகை, அரம்பை, ஊர்வசி ஆகியோர் கதாபாத்திரங்களாக நடித்தார்கள். அரம்பை விஷ்ணு வாகவும், ஊர்வசி இலக்குமியாகவும், மேனகை தோழியாகவும் நடித்தார்கள். இலக்குமி யாக நடித்த ஊர்வசி அரங்க மேடைமேல் வந்தபோது, தான் காதலிக்கும் புரூரவசு அரசன் தேவேந்திரன் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அப்போது அவளுக்கு அவன் மீதிருந்த காதல் பெருகியது. அவள் தான் அரங்க மேடையில் நடிப்பதையும் மறந்து போனாள்.

நாடகத்தில், இலக்குமி யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள் என்று தோழி கேட்கும் கட்டம் வந்தது. அந்தக் கேள்விக்கு 'நான் விஷ்ணுவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்' என்று இலக்குமி பதில் சொல்ல வேண்டும்.' தோழி இலக்குமியைப் பார்த்துக் கேட்டாள்: "நீ யாரைத் திருமணஞ் செய்ய