உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

விரும்புகிறாய்!” என்று. இலக்குமியாக நடித்த ஊர்வசி தான் நடிப்பதை மறந்து தன்னுடைய உண்மை யான கருத்தைக் கூறினாள். “நான் புரூரவசுவைத் திருமணஞ் செய்து கொள்ளப்போகிறேன்” என்று அவள் விடை கூறினாள். நாடகத்துக்குச் சம்பந்தம் இல்லாமல் ஊர்வசி பேசியதைக் கேட்டுச் சபையிலிருந்தவர் எல்லோரும் கைகொட்டிக் கொல்லென்று நகைத்தார்கள்.

நாடக ஆசிரியராகிய பரதருக்குச் சீற்றம் உண்டாயிற்று. நடிப்பதை மறந்து நாடகத்தைக் கெடுத்துவிட்ட ஊர்வசியை அவர் சினந்து சபித்தார். நீ காதலிக்கிற புரூரவசுவை நீ அடையாமல் போவாயாக. நீ காட்டிலே கொடியாகப் பிறந்து வளர்வாயாக என்று அவர் அவளுக்குச் சாபங் கொடுத்தார்.

ஊர்வசி தன்னுடைய தவற்றையுணர்ந்தாள். தன்னை மன்னிக்கும் படியும் தனக்குச் சாபவிடை தரவேண்டும் என்றும், வணங்கிக் கேட்டுக் கொண்டாள். பரதர் அவளுக்குச் சாப விடையளித்தார். 'நீ காட்டிலே சென்று கொடியாக வளர்வாய். ஐம்பத்தைந்து ஆண்டு கழித்த பிறகு மீண்டும் உன் தெய்வ உருவைப் பெறுவாய் என்றும், புரூரவசு அரசனை மணஞ் செய்து வாழ்வாய்' என்றும் அவர் சாபவிடையளித்தார்.

ஊர்வசி காட்டிலே சென்று ஒரு கொடியாகப் பிறந்து வளர்ந்தாள். அந்தக் கொடி ஓடிப்படர்ந்து பூவுந் ஓகாயுங் காய்த்து ஐம்பத்தைந்து ஆண்டு செழித்திருந்தது. பிறகு அவள் சாபம் நீங்கி மீண்டும் ஊர்வசியானாள். அவள் புரூரவசு அரசனைத் திருமணஞ் செய்து கொண்டு எட்டு மக்களைப் பெற்று அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

6