உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஓவியச் சேனனும் ஊர்வசியும்

விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல் பாடல் கூத்து நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறு வதுண்டு. கந்தருவரும் இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அகத்திய முனிவர் ஒரு நாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் பொருட்டுச் சிறப்பாக ஆடல் பாடல்களை நடத்தினான். அவ்வமையம், உருப்பசி (ஊர்வசி) என்னும் கத்தருவ மகள் நாட்டியம் ஆடினாள். ஓவியச் சேனன் நாராதவீணை என்னும் யாழை வாசித்தான் (ஓவியச் சேனனுக்கு சித்திரச் சேனன் என்றும் சயந்தகுமரன் என்றும் வேறு பெயர்கள் உண்டு). தோரிய மடந்தையர் பாட்டுப் பாடினார்கள். குழலும், யாழும், மத்தளமும், தாளமும் முழங்கின. நாட்டியம் தொடங்கிற்று.

இசையுங் கூத்தும் இயைந்து நடந்தன. அகத்திய முனிவரும் இந்திரனும் சபையோரும் நடனத்தையும் பாட்டையும் கண்டுங் கேட்டும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வமையம் நடக்கத்தகாத நிகழ்ச்சியொன்று நிகழ்ந்துவிட்டது.

மேடை மேல் நாட்டியமாடிக் கொண்டிருந்த ஊர்வசி சயந்த குமரனுடைய அழகிலே மனஞ் செலுத்தினாள். சயந்த குமரனும் அவளுடைய அழகிலே மனத்தைச் செலுத்தி அதில் ஈடுபட்டான். அவர்கள் வீணை வாசிப்பதையும் நடனம் ஆடு வதையும் மறந்தனர் ஆகவே வீணை தவறி இசைத்தது; அவளும் நாட்டியத்தைத் தவறாக ஆடினாள். இவ்வாறு பாடல்கள் ஒன்றாகவும் வீணை இசை வேறாகவும், நடனம் இன்னொன்றாகவும் இயைபில்லாமல் இருப்பதை அகத்தியர் உணர்ந்தார். இவ்வாறு திடீரென்று மாறுபடுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனித்தார்.

சயந்த குமரனும் ஊர்வசியும் இசையிலும் கூத்திலும் மனஞ் செலுத்தாமல் புறம்பான வேறு விஷயத்தில் மனஞ் செலுத்தியதே