உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வுள்ளதுமான அந்த மூங்கிலை எட்டு சாண் நீளமுள்ளதாக அறுத்து அதன் இரு தலையிலும் கணுக்களிலும் தங்கப் பூண் கட்டி நவரத்தினங்கள் இழைத்து அழகான தலைக் கோலாகச செய்தார்கள்.

மூங்கிலைத் தலைக்கோலாகக் செய்தவுடன் சயந்த குமரன் சாபம் நீங்கப் பெற்று தேவ உருவம் பெற்று இந்திரலோகஞ் சென்று முன் போல் யாழாசிரியனாக இருந்தான்.

மாதவி சோழ அரசனுடைய சபையிலே தான் கற்ற ஆடல் பாடல்களை அரங்கேற்றினாள். இசை நாட்டியக்கலை இலக்கணப் படி முறையாக அவள் நிகழ்த்திய ஆடல் பாடல்களைக் கலைஞர்களும் அரசனும் மெச்சிப் புகழ்ந்தார்கள்.

சோழ அரசன் அவளுக்குத் தலைக்கோலி என்னும் பட்டத்தை அளித்து அதற்கு அடையாளமாக தலைக்கோலைக் கொடுத்துப் பாராட்டினான். அது முதல் தலைகோல் ஏற்ற கலைவாணரான ஆடவர் தலைக்கோல் ஆசான்' என்றும் மகளிர் 'தலைக்கோலி' அல்லது 'தலைக்கோல் அரிவை' என்றும் பெயர் பெற்றனர்.

சோழ மன்னனிடத்தில் தலைக்கோலையும் 'தலைக்கோலி' என்னும் பட்டத்தையும் பெற்ற மாதவி சோழ நாட்டிலே ஆடல் பாடல் களை நடத்திக்கொண்டு பேரும் புகழும் பெற்றாள். கடைசியில் அவள் மண்ணுலகத்தைவிட்டு இந்திரலோகஞ் சென்று முன் போலவே ஊர்வசியாகி இந்திர சபையில் நாட்டிய நடனங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

(அந்த மாதவியின் பரம்பரையில் வந்த கணிகைப் பெண்கள் அவளைப் போலவே ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து காவிரிப் பூம்பட்டினத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பரம்பரையில் கடைசியாக வந்தவள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற இசை நாட்டியக் கலைகளில் பேர்போன மாதவி. இவள், கரிகாற் சோழனுடைய அவையில் அரங்கேறி 'தலைக்கோலி' பட்டம் பெற்று பூம்புகாரில் வாழ்ந்தாள். ஆடற்பாடல் கலைகளில் பேரும் புகழும் பெற்றவள் கோவலனுடைய காதற்கணிகையாக இருந்தாள்.)

சயந்த குமரன் ஊர்வசியரின் சாப வரலாற்றைக் கீழ்க்கண்ட செய்யுளில் காண்க: