உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

வயந்த மாமலை சயந்த முனிவரன்

எய்திய அவையின் இமையவர் வணங்க இருந்த இந்திரன் 'திருத்திசை யுருப்பசி

ஆடல் நிகழ்க பாடலொடு ஈங்' கென ஓவியச் சேனன் மேவினன் எழுந்து கோலமுங் கோப்பும் நூலொடு புணர்ந்த இசையும் நடமும் இசையத் திருத்திக்

கரந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலில் பொருமுக எழினியில் புறந்திகழ் தோற்றம் யாவரும் விழையும் பாவனை யாகலின் நயந்த காதல் சயந்தன் முகத்தின் நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப் பாடல் முதலிய பல்வகைக் கருவிகள் எல்லாம் நெகிழ்தலின், ஒல்லா முனிவரன் ஒருதலை யின்றி இருவர் நெஞ்சினும் காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு சுந்தர மணிமுடி இந்திரன் மகனை 'மாணா விறலோய்! வேணு வா' கென இட்ட சாபம் பட்ட சயந்தன்

‘சாப விடையருள் தவத்தோய் நீ' என மேவினன் பணிந்து மேதக வுரைப்ப 'ஓடிய சாபத் துருப்பசி தலைக்கட்டுங் காலைக் கழையும் நீயே யாகி

மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத் தலையாங் கேறிச் சார்தி' என்றவன்

கலக நாரதன் கைக்கொள் வீணை

அலகில் அம்பணம் ஆகெனச் சபித்துத்

தந்திரி யுவப்பத் தந்திரி நாரிற்

பண்ணிய வீணை மண்மிசைப் பாடி

ஈண்டு வருகெனப் பூண்ட சாபம்

இட்டவக் குறுமுனி யாங்கே

விட்டனன் என்ப வேந்தவை யகத்தென்.

137

இந்த ஊர்வசி ஓவியச்சேனன் கதை சிலப்பதிகாரத்தில் கூறப் பட்டுள்ளது.