உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பில்லை. அவளோ கணிகைப் பெண். இவனோ அரசகுமரன். அயல் நாட்டில் அரச விருந்தினரைக் கவர்ந்திருப்பவள். இவன் கணிகைப் பெண்ணை நாடிப் போக இயலுமா? கணிகைப் பெண்ணும் புதியவனாகிய இவனைத் தேடி வர இயலுமா?

சில நாட்கள் கழிந்து ஒரு நாள் தற்செயலாக இருவரும் சந்திக்க வாய்ப்பு நேரிட்டது. ஒரு நாள் மாலை நேரத்தில் தேசிகப் பாவை பொழுது போக்குக்காகத் தன்னந்தனியே அரண்மனைப் பூங்காவில் ஓரிடத்தில் அமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந் தாள்.

அதேநேரத்தில் சீவககுமரன் அப்பூங்காவில் இன்னொரு இடத்தில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது வீணையின் இசையைக் கேட்டு அவன் அவ்விசை வந்த வழியை நோக்கி நடந்தான். நடந்து வந்து தற்செயலாகத் தேசிகப் பாவையைக் கண்டான். அவளும் அவனைக் கண்டு வியப்படைந்தாள். முன்னமே அவர்கள் நாடக அரங்கத்தில் ஒருவரை யொருவர் விரும்பியவராகையால் இந்தச் சந்திப்பில் அவர்கள் மனமொத்த நண்பராகவும் காதலராகவும் ஆனார்கள் இவர்கள் பின்னர் நாள்தோறும் சந்தித்தார்கள்.

சில நாட்கள் சென்ற பிறகு சீவக குமரன் தன்நாட்டுக்குச் சென்று விட்டான். சில மாதங்கள் வரையில் அவனைப்பற்றிய செய்தியொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. கடைசியில் சீவக குமரனைப்பற்றி அரண்மனையில் பேசிக்கொண்டதை அவள் கேட்டறிந்தாள். சீவக குமரன் கட்டியங்காரனுடன் போர் செய்து வென்று தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். இப்போது அவன் முடிசூடிக்கொண்டு ஏமாங்கத நாட்டின் அரசனாக வாழ்கிறான். இவ்வாறு அவள் சீவனைப்பற்றிக் கேள்விப் பட்டாள். தன்னைக் காதலித்த அவன் தன்னை அரண்மனைக்கு அழைத்துக்கொள்வான் என்று தேசிகப் பாவை காத்திருந்தாள். நாட்கள் கழிந்து மாதங்கள் சென்றன. ஓராண்டு ஆயிற்று. அவள் எண்ணியது போல அவளுக்கு அழைப்பு வரவில்லை. அவளை அவன் அழைத்துக் கொள்வதான குறி யொன்றும் காணப்படவில்லை.

தேசிகப் பாவை கடைசியாகத் தனக்குள் எண்ணினாள். ஏமாங்கத நாட்டின் மன்னனாக முடிசூடி அரசாள்கிறான் சீவக குமரன். அதிகாரத்திலும் செல்வத்திலும் அவன் முழுகியிருக்கிறான். அதனால் அவன் என்னை மறந்துவிட்டான். அன்றியும் அவன் அரச குலத்தில் பிறந்தவன். நானோ கணிகையர் குலத்தில் பிறந்தவள். அப்படிப்