உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

141

பட்டவன் என்னை ஏற்றுக் கொள்வானா? சப்பி உமிழப்பட்ட மாங் கொட்டையைப் போல அவன் என்னை நினைத்திருப்பான். இவ்வா றெல்லாம் எண்ணிய அவள் அவனை வெறுக்கவில்லை. அவன் மேலிருந்த அன்பும் காதலும் அவளுக்குக் குறையவில்லை. ஆனால், அவன் இப்போது இவளை ஏற்றுக் கொள்வானா? எதற்கும் நேரில் போய்க் காண்பதுதான் சரி என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டையாளும் சீவக குமரன் கணிகைக் குலத்தில் பிறந்தவளான தன்னை ஏற்றுக்கொள்ளாமற் போனால் என்ன செய்வது என்ற கேள்வி அவளுடைய மனத்தில் உதித்தது.

எதற்கும் நேரிலே போய்ப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். பஃலக நாட்டை விட்டுப் புறப்பட்டு அவள் பல நாட்கள் பயணஞ் செய்து ஏமாங்கத நாட்டுக்குச் சென்றாள். சென்று இராசகிரிய நகரத்தையடைந்தாள்.

அங்குச் சில நாட்கள் தங்கியருந்து, சீவக குமரனுடைய பழைய செய்திகளை அங்கிருந்தவரிடத்தில் கேட்டறிந்தாள். சில ஆண்டு களுக்கு முன்பு அனங்க மாலை என்னும் கணிகை குலத்துப் பெண் ஒருத்தி சீவக குமரனைக் காதலித்ததையும் அவன் அவளைக் காதலிக் காததையும், தேசிகப் பாவை அறிந்தாள். இதைப் பயன்படுத்திக் கொண்டு சீவக மன்னனிடம் போக அவள் முடிவு செய்து கொண்டாள்.

ஆகவே, தேசிகப் பாவை மாறுவேடம் பூண்டு சீவகனைக் காண விரும்பினாள். தன்னை அனங்கமாலையின் பணிவிடைப் பெண் என்று கூறிக்கொண்டு அனங்கமாலை எழுதியதாகத் தானே பொய்யாக ஒரு கடிதம் சீவகனுக்கு எழுதிக்கொண்டு அரண்மனைக்குப் போனாள்.

சீவகன் தனியே இருக்கும் சமயம் அறிந்து காவற்காரனிடம் அரசனைக் காணவந்ததாகத் தெரிவித்தாள். அவன் சென்று ஊழியப் பெண் ஒருத்தி வந்திருப்பதைக் கூறினான். சீவகன் அவளை உள்ளே வரவிடும்படி கட்டளையிட்டான்.

ஊழியப் பெண் போல மாறுவேடம் பூண்ட தேசிகப் பாவை உள்ளே போய் அரசனுடைய கால்களில் விழுந்து வணங்கினாள். தான் அனங்க மாலையின் ஊழியப் பெண் என்று கூறித் தான் கொண்டு வந்த திருமுக ஓலையை வணக்கத்தோடு அரசனிடத்தில் கொடுத்தாள். சீவகன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்முறுவல் கொண்டான். பிறகு