உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

திருமுக ஓலையை பிரித்து வாசித்தான். அது அனங்கமாலை தனக்கு எழுதிய கடிதமாக இருந்தது அந்த ஓலை. அந்தக் காதற் கடிதத்தைப் படித்த பிறகு சீவக குமரன் தேசிகப் பாவையை அருகில் அழைத்துத் தழுவிக்கொண்டு தன் அருகில் அமரச்செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான்.

66

“அரசர் பெருமானே! நான் ஓர் ஊழியப் பெண்” என்று தேசிகப் பாவை கூறினாள்.

66

'ஆம் ஊழியப் பெண் வேடத்தில் இருக்கும் தேசிகப் பாவை நீ என்பதை அறிந்தேன். அரச போகத்திலும் செல்வச் செருக்கிலும் முழுகி உன்னை மறந்துவிட்டேன் என்று கருதாதே. உன்னை நான் மறந்தேனில்லை” என்று கூறி மகிழ்ந்தான். அதைக் கேட்டு தேசிகப் பாவை விம்மிதமடைந்து பேருவகைக் கொண்டாள்.

அருளு மாறென்னை? அநங்கமாலை, அடித்தோழி யன்றோ? எனத் தெருளலான் செல்லக் களிமயக்கினால், திகைக்கும் என்றென்

அறிவு அளக்கிய

மருளாற் சொன்னாய், மறப்பனோ நான், நின்னை? என்ன,

மகிழ் ஐங்கணை

உருளும் முத்தார் முகிழ் முலையினாள் உள்ளத் துவகை

தேற்றினாளே

(சீவகசிந்தாமணி, இலக்கணையார் 216)

சீவக அரசன் அவளைத் தன்னுடைய அரண்மனையில் வைத்துக் கொண்டான். அரண்மனை நாடக அரங்கத்தில் தேசிகப் பாவை நாள்தோறும் இசை பாடியும் நடன நாட்டியங்கள் செய்தும் அரசனை மகிழ்வித்தாள். அரண்மனையில் தேசிப் பாவையின் இசையுங் கூத்தும் நெடுங் காலம் நடந்தன.

நரம்பு மீது இறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலும் ஏங்கக் கிண்கிணிசிலம்பொ டார்ப்பப் பரந்தவாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித் தாளே

(சீவகசிந்தாமணி, இலக்கணையாளர் 219)