உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கலகஞ் செய்வதில் கைதேர்ந்தவரான நாரதர் வச்சாவதி நாட்டை விட்டுச் சிமந்திரபுரம் என்னும் ஊருக்குப் போனார். அவ்வூரை அரசாண்டு கொண்டிருந்த தமிதாரி என்னும் அரசனிடம் சென்றார். தமிதாரி நாரதரை வரவேற்று உபசரித்தான். வந்த காரியம் என்ன வென்று கேட்டான். நாரதர் கூறினார்:

66

அரசர் பெருமானே! உம்முடைய பெருமை என்ன, சிறப்பு என்ன, அந்தஸ்து என்ன! உம்முடைய பேரும் புகழும் உலக மெங்கும் பரவியிருக்கிறது. ஆனால், ஒரே ஒரு குறைதான் உண்டு. பிரபங்க நகரத்தில் இருக்கிற அபராஜித, அனந்த வீரியர் இடத்தில் இரண்டு சிறந்த நடன மாதர்கள் இருக்கிறார்கள். அழகும் இளமையும் உள்ளவர்கள். பர்பரை, சிலாதிகை என்பது அவர்களுடைய பெயர். அவர்களுடைய நடனக் கலை மகா அற்புதமானது. இந்தரசபையில் உள்ள அரம்பை ஊர்வசிகளின் நடனத்தைவிட அவர்கள் நடனம் சிறந்தது. அந்த நர்த்தகிகள் உம்முடைய சபையில் இல்லாதது. பெருங்குறையாகும். மகாராஜராகிய உம்முடைய அரண்மனையில் அந்த நடனமாதர் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்!” என்று நாரதர் தமிதாரி அரசனிடம் கூறினார்.

நாரதர் பேசியது தமிதாரி அரசனுக்கு ஆசையை உண்டாக்கிற்று. அந்த நர்த்தகிகளைத் தன்னுடைய அரண்மனைக்கு அழைக்க வேண்டும். என்னும் எண்ணம் அரசர் மனத்தில் தோன்றிற்று. தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை அறிந்த நாரதர் அரசனிடம் விடைபெற்றுக் கொண்டு போனார். போகும் போது, தமக்குள் எண்ணினார்.

விதை விதைத்துவிட்டேன். தமிதாரி இனி சும்மா இருக்க மாட்டான். நர்த்தகிகளைத் தன்னிடம் அனுப்பும்படி அபராஜித, அனந்த வீரியரைக் கேட்பான். அவர்கள் அனுப்பமாட்டார்கள். பிறகு தமிதாரி அவர்கள் மேல் போருக்குச் செல்வான். நாம் வேடிக்கைப் பார்க்கலாம். நம்மை அவமதித்ததன் பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.’

நாரதர் எண்ணியது போலவே தமிதாரி அரசன், நர்த்தகி களைத் தன்னிடம் வரவழைத்துக் கொள்ளக் கருதினான்.

பர்பரையும் சிலாதிகையும், அரம்பை ஊர்வசியரைவிடச் சிறந்த நர்த்தகிகள் என்று கலையில் வல்லவரான நாரதரே புகழ்கிறார் அப்படிப்பட்ட நடனமாதர் நம்முடைய சபையில் இருக்கவேண்டும்.