உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

145

அவர்கள் நம்மிடம் இருப்பது நமக்குப் புகழையும் பெருமையையும் மதிப்பையும் அதிகப்படுத்தும். உடனே அவர்களை வரவழைக்க வேண்டும். நர்த்தகிகளை அபராஜித, அனந்த வீரியர் அனுப்பா விட்டால், அவர்களோடு போர்செய்து நர்த்திகளைக் கைப்பற்றி கொண்டுவர வேண்டும் என்று அவன் தனக்குள் எண்ணினான்.

இவ்வாறு கருதிய தமிதாரி அரசன் ஒரு திருமுகம் எழுதி அதைத் தூதர்கள் மூலமாக அபராஜித, அனந்த வீரியருக்கு அனுப்பினான். தூதர்கள் திருமுக ஓலையை எடுத்துக்கொண்டு வந்து அபராஜித அரசனிடங் கொடுத்தார்கள்.

திருமுருக் கடிதத்தை அபராஜிதனும், அனந்தவீரியனும் படித்தார்கள். பிறகு, மந்திராலோசனைச் சபைக்குச் சென்று தனியே அமைச்சர்களுடன் கலந்து யோசித்தார்கள்.

தமிதாரி அரசன் நம்முடைய நர்த்தகிகளைத் தன்னிடம் அனுப்பும் படி கேட்கிறான். அனுப்பினால் அவனுக்கு அஞ்சிப் பணிந்து அனுப்பியதாகக் கருதுவான். அனுப்பாவிட்டால் அவர்களைக் கொண்டுப்போகப் படையெடுத்து வருவான். இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு விஷயத்தையும் கருதவேண்டும். தமிதாரிக்கு கனகஸ்ரீ என்னும் ஒரே மகள் இருக்கிறாள். நம்முடைய இளவரசருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கனகஸ்ரீயை அனந்த வீரியனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், நம்முடைய நர்த்தகியரை அனுப்பக்கூடாது. இவ்வாறு மந்திர சபையில் அமைச்சர்களுடன் கலந்து யோசித்து முடிவு செய்தார்கள்.

பிறகு, நர்த்தகியரை அனுப்பிவைப்பதாகக் கூறி ஒரு திருமுகக் கடிதம் எழுதித் தூதரிடம் கொடுத்து அனுப்பினார்கள் தூதர் கொண்டு வந்த திருமுகக் கடிதத்தைப் படித்த தமிதாரி அரசன் மனமகிழ்ந்து நர்த்தகிகளின் வருகையை எதிர்பார்த் திருந்தான்.

ஆனால் இவர்கள் நர்த்தகிகளை அனுப்பவில்லை அபராஜிதனும், அனந்த வீரியனும் நடனக் கலைகளை நன்கு பயின்ற வராகையால் தாங்களே நர்த்தகியர்போலப் பெண் வேடம் பூண்டு செல்வதென்றும், சென்று தமிதாரி அரசனுடைய அரண்மனையில் இடம் பெற்று அவனுடைய குமாரியான கனகஸ்ரீயைக் கொண்டு வந்து அனந்த வீரனுக்குத் திருமணம் செய்து வைப்பதென்றும் முடிவு செய்திருந்