உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

தார்கள். இவர்கள் சென்று திரும்பிவரும் வரையில் அமைச்சர்கள் அரசாட்சியை நடத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று முடிவுசெய்து அமைச்சர்களிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு நர்த்தகியர் வேடம் பூண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

‘நர்த்தகி’களும் அவர்களைச் சேர்ந்த நடனக் குழுவும் தமிதாரி அரசனின் அரண்மனையை யடைந்தார்கள். தமிதாரி அரசன், நர்த்தகிகளுக் குரிய மரியாதை செய்து அவர்களை வரவழைத்து அவர்களுக்குக் கென்று தனியிடங் கொடுத்தான். 'நர்த்தகியரும்' அவருடைய இசை வாணப் பரிவாரங்களும் அந்த இடத்தில் தங்கினார்கள்.

அபராஜிதன் பர்பரையாவும் அனந்த வீரியன் சிலாதிகை யாகவும் பெண் வேடம் பூண்டிருந்தார்கள். அவர்களைப் பெண் வேடம் பூண்ட ஆண்கள் என்று ஒருவரும் கருதவில்லை. உண்மையான நர்த்தகியர் என்றே கருதினார்கள்.

அரண்மனை அரங்கத்தில் பர்பரை, சிலாதிகையரின் நடனம் நடந்தது. தமிதாரி அரசனும், அமைச்சர்களும், நகரப் பெருமக்களும் வந்து நடனத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பேர்போன புதிய நர்த்தகிய ராகையால் மண்டபத்தில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. நர்த்தகியரும் அவருடைய குழுவும் நடனத்தையும் இசைப்பாட்டு பக்கவாத்தியம் முதலியவற்றைத் திறமையாவும், செவ்வையாகவும் செய்தார்கள். அவர்களுடைய திறமையைக் கண்டு எல்லோரும் புகழ்ந்து

மெச்சினார்கள்.

அபராஜிதனும் அனந்த வீரியனும் இசை, நாட்டியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவராகையால், அவர்கள் நடனத்தை நன்றாகச் செய்தார் கள். அவர்களின் பெண் வேடமும் பொருந்தி யிருந்தது. பெண் வேடம் பூண்ட ஆண்கள் என்று அவர்களை ஒருவரும் சந்தேகப்படவே இல்லை.

தமிதாரி அரசன் நர்த்தகிகளை பர்பரையும், சிலாதிகையும் என்றே உண்மையாக நம்பிவிட்டான். அவன் அவர்களுக்கு ஆடை யணிகளைப் பரிசாகக் கொடுத்துச் சிறப்புச் செய்தான்.

மேலும், அவ்வரசன் தன்னுடைய மகளான கனகஸ்ரீக்கு நடனக் கலையைக் கற்பிக்கும்படி 'நர்த்தகி’களை ஆசிரியர்களாக அமைத்தான். இவ்வாறு ஆசிரியர்களாக அமைத்தது ‘நர்த்தகி' களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.