உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

வீரர்களை அனுப்பினான். அரச ஊழியர்கள் தேடிச்சென்று நகரத்துக்கு வெளியே அவர்களைக் கண்டு வழிமறித்து அவர்களை எதிர்த்தார்கள். போர்க் கலையில் வல்லவர்களான, அபராஜிதனும் அனந்த வீரியனும் (இப்போது அவர்கள் வேடம் நீங்கிச் சுய உருவத்துடன் இருந்தார்கள்) எதிர்த்த வீரர்களை எளிதில் அடித்துத் துரத்திவிட்டார்கள். விஷயம் தெரிந்ததும் தமிதாரி அரசன் பெருஞ்சினங்கொண்டு தானே சேனையை அழைத்துக்கொண்டு போருக்கு வந்தான். இதற்குள்ளாக முன் ஏற்பாட்டின்படி வச்சாவதி நாட்டிலிருந்து வந்த அபராஜித, அனந்த வீரியரின் சேனைகள் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தன. இரண்டு சேனைகளுக்கும் போர் நடந்தது. கடைசியாக அந்தப் போரில் தமிர்தாரி அரசன் தோற்றுப் போனான். வெற்றி பெற்ற அபராஜித அனந்த வீரியர்கள் தங்கள் சேனையுடனும் இளவரசியுடனும் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.

அபராஜிதன் தன்னுடைய பட்டத்து யானைமேல் அமர்ந்து சேனைகள் புடைசூழ வெற்றி முழக்கத்துடன் நகரத்துக்குள் வந்தான். அனந்த வீரியனும் அவளும் இன்னொரு யானை மேல் அமர்ந்து நகரத்துக்கு வந்தார்கள். அமைச்சர்களும் நகரப் பெருமக்களும் அவர்களை மகிழ்ச்சி ஆரவாரத்தோடு எதிர் கொண்டு அழைத்தார்கள். அனந்த வீரியனுக்கும் கனகஸ்ரீக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு இசையும் நடனமும் சிறப்பாக நடந்தன. பர்ப்பரை, சிலாதிகையரின் நாட்டியக் கச்சேரி விருந்தினர் மனத்தைக் கவர்ந்தன.