உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சுரமஞ்சரியின் சபதம்

ஏமாங்கத நாட்டின் தலைநகரமான இராசமாபுரத்தில் ஆண்டு தோறும் நீராட்டு விழா நடப்பது வழக்கம். அந்த வழக்கப்படி நீராட்டு விழா கொண்டாடப்பட்டது.

நகரப் பெருமக்கள், முக்கியமாக நம்பியரும் நங்கையரும், நீராடுவதற்காகவும் வேடிக்கை பார்ப்பதற்காகவும் ஆற்றங் கரைக்குச் சென்றார்கள்.

இராசமாபுரத்துச் செல்வர்களில் ஒருவரான குபேர மித்திரரின் மகளான குணமாலையும் இன்னொரு செல்வரான குபேரதத்தரின் மகளான சுரமஞ்சரியும் தத்தம் தோழியருடன் பல்லக்கில் அமர்ந்து நீராடுவதற்காக ஆற்றங்கரைக்குப் போனார்கள். அவர்கள், தேய்த்துக் குளிப்பதற்காக நறுமணமுள்ள சுண்ணப் பொடியையும் தங்களுடன் கொண்டு போனார்கள்.

அக்காலத்தில், மணமுள்ள சுண்ணப்பொடி தேய்த்து நீராடுவது வழக்கம். இந்தப் பெண்மணிகள் கொண்டுபோன சுண்ணப்பொடி இவர்களாலேயே உண்டாக்கப்பட்டது.

·

ஆற்றங்கரைக்குச் சென்ற பிறகு சுரமஞ்சரி தன்னுடைய பொடியைக் குணமாலைக்குக் காட்டி "இது நான் செய்த சுண்ணப் பொடி. இதன் மணத்தைப் பார். இதுபோன்ற சுண்ணப் பொடி எங்குமே கிடையாது” என்று கூறினாள்.

66

குணமாலை அந்தப் பொடியைக் கையிலெடுத்து முகர்ந்து பார்த்து இது அவ்வளவு சிறந்தது அன்று. இதோ என்னுடைய பொடியைப் பார்” என்று கூறித் தன்னுடைய சுண்ணப்பொடியை அவளுக்குக் காட்டினாள்.

சுரமஞ்சரி, அந்தப் பொடியை விரலினால் எடுத்து முகர்ந்து பார்த்து "இது சிறந்தது அன்று, என்னுடைய சுண்ணத்துக்கு ஈடாக எதுவுங் கிடையாது” என்று சொன்னாள். இது பற்றி அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. இருவரும் தங்கள் தங்கள் பொடிதான் உயர்ந்தது என்று வாதாடினார்கள்.