உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. காந்தருவ தத்தையின் இசைத் திருமணம்

இராசமாபுரம் இன்று பரபரப்பாகக் காணப்படுகிறது. பெரு வீதிகளிலும் குறுந் தெருக்களிலும் மக்கள் திரள்திரளாகக் காணப் படுகின்றனர். ஆடவரும் மகளிரும் புத்தாடை அணிந்து ஒப்பனை செய்து அழகாகக் காணப்படுகின்றனர். இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் களிப்பும்திருவிழாக் காணப் போகிறவரை நினைவூட்டு கின்றன. இராச வீதியில் கூட்டம் இன்னும் அதிகமாக காணப்படுகிறது.

ஆறு கிடந்தன்ன அகனெடுந் தெருவில்' மக்கள் கூட்டங் கூட்டமாகப் போவது பேராற்றில் நிறைவெள்ளம் போவது போல் காணப்படுகின்றது. சீமான்களும் சீமாட்டிகளும் பல்லக்கு ஏறிச் செல்கின்றனர். கூட்டத்தினிடையே வெண்மை, செம்மை, பசுமை, பொன்மை முதலான நிறமுள்ள பல்லக்குகள் செல்வது இனிய காட்சியாக விளங்குகிறது. சில சீமாட்டிகள் ‘வையம்', 'பாண்டில் என்னும் அழகான வண்டிகளில் போகிறார்கள். இந்த வண்டிகளை மிடுக்கான காளை மாடுகள் கழுத்தில் அணிந்த சிலம்புகள் ஒலிக்க வேகமாக இழுத்துச் செல்கின்றன. சீமாட்டிகள் ஏறிச் செல்லும் இவ் வண்டிகளை ஓட்டுகிறவரும் பெண் மகளிரே. அரச குமாரர்களும் குறுநில மன்னர்களும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மேல் அமர்ந்து பரிவாரங்கள் புடைசூழ இராஜவீதி வழியே செல்கிறார்கள். எங்கும் சிரிப்பும் களிப்பும் கேளிக்கையும் வேடிக்கையுமாகக் காணப் படுகின்றன. இதன் காரணம் என்ன? இவர்கள் எங்குச் செல்கின்றனர்.

இன்று காந்தருவதத்தையின் சுயம்வரம் நடைபெறுகின்றது. இவர்கள் எல்லோரும் சுயம்வரத்தைக் காணச் செல்கின்றனர். அழகின் செல்வி என்றும் இசையரசி என்றும் உலகம் போற்றும் காந்தருவதத்தை இராசமாபுரத்துச் செல்வச் சீமான்களில் முதல்வராகிய கிறீதத்தருடைய வளர்ப்பு மகள். காந்தருவதத்தைக்குத் திருமணம்! இந்த விழாவைக் காண்பதற்குத்தான் மக்கள் திரண்டு செல்கிறார்கள்.

சுயம்வரம் என்றால் இது சாதாரண சுயம்வரம் அன்று. அரச குமாரர்களையும், நம்பிக் குமரர்களையும் அலங்கார மண்டபத்தில்