உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கலைபுறஞ் சூழ்ந்த அல்குல் கார்மயில் சாய லாளும் மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவில் தடக்கை யானும் இலைபுறங் கண்ட கண்ணி இன்தமிழ் இயற்கை இன்பம்' நிலைபெற நெறியில் துய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்.

பிறகு, சுரமஞ்சரி தோழிமாருடன் வண்டியில்அமர்ந்து கன்னி மாடஞ் சென்றாள். அவளுடைய தோழி சுரமஞ்சரியின் தாயினிடம் நிகழ்ந்ததைத் தெரிவித்தாள்.

சுரமஞ்சரி தன்னுடைய சபதத்தை நீக்கிக் காமன் கோட்டஞ் சென்று வழிபட்டதையும், அங்குச் சீவகனைக் கண்டு அவன்மேல் காதல் கொண்டதையும் அவள் சீவகனைத் திருமணஞ் செய்துகொள்ள இருப்பதையும் ஆதியோடந்தமாகக் கூறினாள். இவற்றைக் கேட்ட அவளுடைய தாய் மனம் மகிழ்ந்து தன்னுடைய கணவனான குபேரதத்தனிடம் இவற்றைக் கூறினாள்.

குபேரதத்தன் பெரிதும் மனம் மகிழ்ந்தான். தன்னுடைய மகளைச் சீவகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க இசைந்தான். அரசனையும் நகர மக்களையும் திருமணத்துக்கு அழைத்தான் தன்னுடைய மாளிகையில் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தான்.

எல்லோரும் மணமக்களை வாழ்த்தினார்கள். சுரமஞ்சரி சீவக்குமரனுடன் இனிது வாழ்ந்திருந்தாள்.

அடிக்குறிப்புகள்

1. 'இன் தமிழ் இயற்கை இன்பம்' - அகப் பொருளாகிய காதல்.