உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

165

காந்தருவதத்தை மேடைமேற் சென்று நீலநிறத்திரைக்கு முன்னர் நின்று அரசனுக்கும் சபைக்கும் கைகூப்பி வணக்கஞ் செய்து அமர்கின்றாள். அமர்ந்து வீணை வாசித்து இசைப் பாட்டுப் பாடுகிறாள். சபையோர்க்கு இசைப்பாடி அளித்த இசையமிர்தத்தை எல்லோரும் செவியாரப் பருகி வியந்து மகிழ்கின்றனர்.

மணமகள் சபையோருக்கு இசைப் பாடலைப் பாடி முடித்த பிறகு, வீணாபதி என்னும் தோழி எழுந்து மேடை மேல் நின்று அருகிலுள்ளோரை நோக்கி இசைப்போட்டி நடைபெற வேண்டிய முறையை விளக்கிக் கூறுகிறாள். மணமகள் இசை பாடினால் போட்டியிடுவோர் பாட்டுக்கு இசைய வீணை வாசிக்க வேண்டும். மணமகள் வீணை வாசித்தால் அந்த இசைக்கு ஏற்பப் போட்டியிடு கிறவர் பாட்டுப் பாட வேண்டும். இம்முறைப்படி ‘இசைப் போர்' நிகழும் என்று அவள் கூறுகிறாள்.

தளையவிழ் கோதை பாடித் தானமர்ந் திருப்பத் தோழி விளைமதுக் கண்ணி வீணாபதி யெனும் பேடி, 'வேற்கண் இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல், அன்றேல் வளையவள் எழாலின் மைந்தர் பாடுக, வல்லை' என்றாள்.

இசைப் போட்டி தொடங்குகிறது. ஓர் அரச குமரன் வந்து அமர் கிறார். மனமகள் இசை பாடுகிறாள். அரசகுமரன் வீணை வாசிக்கிறான். மணமகள் அதற்கு ஒப்ப இசை பாடுகிறாள். இசை பொருந்தாமல் தோற்றுப் போகிறான். இவ்வாறு ஒருவருக்குப் பிறகு ஒருவராக அரச குமாரர்கள் வந்து இசை பாடியும் வீணை வாசித்தும் போட்டியிடு கின்றனர். அவர்கள் ஒவ்வொரு குறைபாடு உள்ளவர்களாய்த் தோற்றுப் போகிறார்கள். காந்தருவதத்தை பாடுவதும் வீணை வாசிப்பதும் அமிர்தம் போன்று இனிக்கின்றன. போட்டியிடுவோரின் பாட்டும் வாசிப்பும் ஏதோ ஒரு வகையில் குறைபாடுள்ளதாக மாண்பற்றிருக்கின்றன.

அரங்கத்தில் உள்ள இசைக் கலையைக் கரைகண்ட இசைப் புலவர்கள் மணமகளின் இசையைப் புகழ்ந்து போற்று கிறார்கள். போட்டியிடுவோரின் இசை மரபுக்கு மாறுபட்ட இசைகளைக் கேட்டு வெறுக்கிறார்கள். இவ்வாறு அரச குமாரர் இசைப் பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் தோற்றுப் போகின்றனர்.