உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

167

இந்தச் சமயத்தில் மண்டபத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. எல்லோரும் மண்டபத்தின் வாயிற் பக்கம் நோக்குகிறார்கள். “சீவக நம்பி வருகிறார். சீவக நம்பி! சீவக நம்பி!” என்னும் குரல் அரங்கத்தில் கேட்கிறது. இராசமாபுரத்தில் எல்லோருக்கும் அறிமுகமான சீவகநம்பி தன்னுடைய நண்பர்களோடு மண்டபத்தில் நுழைகிறார். கலைகள் பலவற்றிலும் தேர்ந்தவர் என்று புகழப்பெற்ற சீவகசாமி இசைப் போட்டியில் கலந்து கொள்ள வருகிறார். எல்லோருக்கும் புதியதோர் ஊக்கம் உண்டாகிறது. உற்சாகம் பிறக்கிறது. சீவக நம்பிக்கு இசைப் போட்டியில் இடந்தர வேண்டும் என்று சபையோர் தங்களுடை கருத்தை வெளியிடுகின்றனர்.

அரசர் பெருமானும் இசைகிறார். சீவக நம்பி அரங்க மேடைக்குச் செல்கிறார். கூட்டத்தில் சிலர் ‘சீவக நம்பி இசை வெல்வார்’ என்று கூறுகின்றனர். 'இல்லை. காந்தருவதத்தையை வெல்ல முடியாது' என்கின்றனர் வேறு சிலர். அரங்கத்தில் புதிய உற்சாகமும் தெம்பும் ஏற்படுகிறது.

மேடைக்கருகில் வந்த சீவக நம்பியை மணமகள் காந்தருவ தத்தை நோக்குகிறாள். இந்தக் குமரனுடைய இளமை, ஆண்மை, அழகு, மிடுக்கு, விநயம் முதலியவை அவளுடைய மனத்தைக் கவர்கின்றன. ஆறு நாட்களாக நூற்றுக்கணக்கான குமரர்களை இசைப் பாட்டில் வென்ற இவளுக்கு, சீவக நம்பியைக் கண்டபோது, காதல் உணர்ச்சி உண்டாகிறது. இவ்வுணர்ச்சியைக் காந்தருவதத்தை மனத்திற்குள் அடக்கிக் கொள்கிறாள்.

நீங்களும் பெருத்திற் றூங்கி ஈயின்றி யிருந்த தீந்தேன் நாம்கணாற் பருகியிட்டு, நலனுரைப் பட்ட நம்பி

‘பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பல் நீ, நெஞ்சே!' என்றாள் வீங்கிய காமம் வென்றார் விளைத்தஇன் பத்தோ டொப்பாள்.

சீவகன் மாட்டுக் காதல் கொண்ட மணமகள் காந்தருவ தத்தை, இவன் இசைக் கலையில் வல்லவன்தானோ என்பதை யறிய ஆவல் கொள்கிறாள். இவள் தான் தோழி வீணாபதியை நோக்கி 'இவரிடம் வீணையைக் கொடு' என்னுங் குறிப்புத் தோன்றக் கண்ணைக் காட்டினாள். இவளுடைய கருத்தைக் குறிப்பினால் உணர்ந்த வீணாபதி, ஒரு வீணையை ணையை எடுத்துச் சீவகனிடம் கொடுக்கிறாள். சீவகன் வீணையை வாங்கி அதை நோக்குகிறான். வீணையை விரலால் தட்டிப்