உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

181

இருந்து பிறகு இராணியாவாள் என்று சித்திகர் ஜாதகங் கணித்துக் கூறியபடி இங்கு வந்து ஊழியக் காரியாக இருந்தாள் என்றும் கூறினார்கள். மாளவி அரச குடும்பத்தில் பிறந்த அரசகுமாரி என்பதை அறிந்த பிறகு இராணிகள் அரசன் கருத்துக்கு இணங்கிவிட்டார்கள். அரசன் மாளவியை மூன்றாவது மனைவியாக மணஞ் செய்து கொண்டான். பிறகு, மாளவி தான் கற்ற ஆடல் பாடல்களை அரண் மனையில் சிலசமயம் நடத்தினாள். அரசனும் மற்ற இராணியரும் இவளுடைய கலையின் செவ்வியைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர்.