உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உதயணன்

-

யாழ் வித்தகன்

வத்தவநாட்டு அரசன் சதானிகன் தன்னுடைய இராணி மிருகா பதியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான். அவர்களுக்கு ஒரு அருமை யான ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு உதயணன் என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். உதயணன் தன்னுடைய தாய் தந்தையருடன் அரண்மனை யில் நெடுங்காலம் வளரவில்லை அவன் தன்னடைய தாய்ப் பாட்டனான சேடக முனிவரிடஞ் சென்று அவரிடம் வளர்ந்து வந்தான். சேடக முனிவர் விபுலகிரி மலைக்காட்டில் ஓர் ஆசிரமத்தில் இருந்தார். சேதி நாட்டின் அரசனாக வாழ்ந்திருந்த அவர் அரசாட்சியை வெறுத்துத் தன்னுடைய மகனான விக்கிரமனுக்குப் பட்டங்கட்டித் தான் துறவு பூண்டு விபுலகிரிக் காட்டுக்குச் சென்று ஆசிரமம் அமைத்து வசித்து வந்தார். அவருடன் வேறு சில முனிவர்களும் தங்கித் தவஞ்செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் பிரமதத்தர் என்பவர்.

உதயணன் தன் பாட்டனாரான சேடக முனிவருடன் விபுலகிரிக் காட்டிலே இருந்தபோது அவனுக்கு அவர் வில் வித்தை, வாட்போர் முதலிய வித்தைகளைக் கற்பித்தார். இந்த வித்தகைளுடன் பாடல் கலையாகிய இசைக் கலையையும் கற்பித்துக் கொடுத்தார். பிறகு குழல் வாசிக்கவும் கற்பித்தார். உதயணன் இந்தக் கலைகளெல்லாங் கற்று அக்கலைகளில் வல்லவனானான். அந்த ஆசிரமத்தில் இருந்த பிரமதத்த முனிவர் உதயணனுக்குத் தன்னிடம் இருந்த கோடபதி என்னும் இசைக் கருவியை வாசிக்கக் கற்பித்துக் கொடுத்தார். அவனும் யாழ் வாசிப்பதில் வல்லவனானான். இவ்வாறு உதயண குமரன் இசைக் கலைகளில் வல்லவனாக விளங்கினான். பிரமதத்தர் உதயண குமாரனுக்கு யானையை வசப்படுத்தும் வித்தையையும் கற்றுக் கொடுத்தார்.

விபுலகிரிமலையைச் சார்ந்த பெரிய காட்டிலே யானைகளும் இருந்தன. இப்போது வளர்ந்துவிட்ட உதயணகுமரன் காட்டில் போய் யாழ் வாசித்தும், இசை பாடியுங் காலங் கழித்தான். காட்டிலே போய் அவன் கோடபதி யாழை வாசிக்கும்போது அந்த யாழின் இனிய