உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

உதயணன் யாழை எடுத்துக்கொண்டு

187

யானை இருந்த

இடத்துக்குப் போனான். வெறிகொண்ட யானையின்அருகில் அவன் போவதைக் கண்டவர் யானை இவனைக் கொன்றுவிடும் என்று எண்ணி அச்சமும் ஆச்சரியமும் அடைந்து என்ன ஆகுமோ என்று நினைத்துத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். உதயணன் தன்னுடைய யாழை இசைத்துக் கொண்டே யானையின் அரு கில் சென்றான். இசையைக் கேட்ட யானை அவன் பக்கமாகத் திரும்பி நின்றது. பிறகு இசையைக் கேட்டுக்கொண்டே அசைவற்று இருந்தது. உதயணன் அதன் அருகில் சென்று சில மந்திர வசனங்களைக் கூறினான். பிறகு மீண்டும் யாழ் வாசித்துக் கொண்டிருந்தான். யாழிசையைக் கேட்டுக்கொண்டு நின்ற யானை வெறி நீங்கி இயற்கை நிலையை யடைந்தது. பிறகு அது முழுவதும் அவனுக்கு அடங்கி விட்டது. அவன் அப்போது அதன் மேல் ஏறி அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டே அதை யானைப் பந்திக்குச் செலுத்தினான். அதை யானைப் பந்தியில் விட்டுவிட்டுப் பிரச்சோதன அரசனிடம் வந்தான்.

உதயணன் வெறிகொண்ட யானையை அடக்கியதைக் கண்டு அரசனும் நகரப் பெருமக்களும் பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர். அரசன் உதயணனை ஆசனத்தில் அமர்த்தி நன்றி கூறினான். தன்னுடைய அரண்மனையிலே உதயணனைத் தங்கும் படிக் கேட்டுக்கொண்டான். அரசனுக்குரிய சிறப்புக்களுடனும் மரியாதையோடும் அவனை நடத்தினான். வாட்போர் விற்போர் முதலிய போர்க் கலைகளிலும் இசைக் கலைகளிலும் வல்லவன் என்பதை அறிந்து மன்னன் தன்னுடைய பிள்ளைகளாகிய அரச குமாரர்களுக்குப் போர்ப் பயிற்சி கற்பிக்குமாறும் தன்னுடைய மகளான வாசவதத்தைக்கு இசைக் கலையைக் கற்பிக்குமாறும் உதயணனைப் பணித்தான். அவனும் அதற்கு இணங்கி அவர்களுக்குக் கலைகளையும் வித்தைகளையும் கற்பித்து வந்தான்.

அரசகுமாரர்களும் அரசகுமாரத்தியும் உதயணனிடத்தில் முறையே போர்ப் பயிற்சிகளையும் இசைக் கலைகளையும் கற்றுவந்தனர். சில மாதங்களுக்குள் அவர்கள் வித்தைகளையும் கலை களையுங் கற்றுத் தேர்ச்சியடைந்தனர். அப்போது பிரச்சோதன அரசன் தன்னுடைய குமாரர்கள் கற்ற வித்தைகளை அரங்கேற்றச் சபை கூட்டினான். அமைச்சர்கள், சேனாதிபதிகள், போர்வீரர்கள், நகரப் பெருமக்கள் முதலியோர் இருந்த சபையிலே அரசகுமாரர்கள் தாங்கள்