உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

191

அடுத்த நாள் பதுமாபதி கோட்டத்துக்கு வந்து வணங்கி கன்னி மாடத்துக்குத் திரும்பியபோது அவளுடைய தோழி ஐராவதி, கன்னி மாடத்தில் பிராமணருக்குத் தானம் வழங்கப் போவதாக அங்கிருந்த பிராமணருக்குத் தெரிவித்தாள். அப்போது பிராமணன் வேடத்தி லிருந்த உதயணன் ஐராவதியைத் தொடர்ந்து சென்று அவளுடைய யஜமானியின் பெயர், அவள் இருக்கும் இடம், தானங்கொடுக்கப்படுகிற இடம் முதலியவை களைக் கேட்டான். இந்தப் பார்ப்பான் தானம் பெறுவதற்காக வருகிறான் என்று எண்ணி ஐராவதி தன் தலைவியின் பெயர், அவள் இருக்கும் கன்னிமாடத்தின் முகவரி முதலியவைகளை அவனுக்குக் கூறினாள்.

உதயணன் விபரந் தெரிந்துகொண்டு கன்னிமாடத்துக்குச் சென்றான். கன்னிமாடத்தில் பதுமாபதி அவனைக் கண்டு அவனுடைய ஊர், பெயர், வந்த காரணம் முதலியவற்றைக் கேட்டாள். மாறுவேடங் கொண்டிருந்த உதயணன் தன்னுடைய உண்மை நிலையை மறைத்துக் கூறவேண்டியவனானான். “காந்தார நாட்டு இரத்தினபுரம் என்னுடைய ஊர். அவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்த சாண்டியன் என்பவர் என்னுடைய தந்தை. என் பெயர் மாணகன். இங்கு இந்த நகரத்தைப் பார்க்க வந்தேன்” என்று அவன் அவளுக்குக் கூறினான். பதுமாபதி இவனுடைய வார்த்தையை நம்பவில்லை. பிராமண வேடத்துடன் காணப்பட்டாலும், உண்மையில் இவன் அரசகுலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று இவனுடைய தோற்றத்தைக் கொண்டு அவள் தனக்குள் எண்ணினாள். இவன் ஏதோ காரணத்துக்காகத் தன்னுடைய உண்மை நிலையை மறைத்துக் கூறுகிறான் என்று அவள் கருதினாள். பிறகு உள்ளே சென்று தன்னுடைய தோழி ஐராவதியிடம் இவனுடைய உண்மை நிலையைச் சோதித்து அறியவேண்டும் என்று இரகசியமாகக் கூறினாள்.

ஐராவதி உதயணனிடம் வந்து நயமாகப் பேசி, “உமக்கு என்னென்ன வித்தைகள் தெரியும்" என்று கேட்டாள். வேஷத்துக்குத் தகுந்தபடி பேசவேண்டும் என்று அவன் விழிப்பாக விடை கூறினான். “பிராமணர் வேள்வி செய்வதைத் தவிர வேறு வித்தைகளைக் கற்பதில்லை. நான் வேள்வி செய்யக் கற்றிருக்கிறேன். சில சமயங் களில் என்னுடைய மனைவி என் மேல் கோபங்கொண்டு சமையல் செய்யாமல் சண்டித்தனம் செய்வாள். அப்போது நானே பானைகளை எடுத்துச் சமையல் செய்வேன். சமையல் செய்யும்போது பானையைக்