உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

குடமுழாவாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன்” என்று கூறினான். இதைக் கேட்ட ஐராவதி நகைத்தாள்.

அப்போது பதுமாபதி யாழைக் கொண்டுவரும்படி ஐராவதியிடங் கூற அவள் அதைக் கொண்டு வந்து கொடுத்தாள் பதுமாபதி அதனைக் கையில் வாங்கி திவவைத் தளர்த்த ஆணி களை திருப்பினாள். திவவு மிக அழுத்தமாக இருந்தபடியால் அதைத் தளர்த்திக் கொடுக்கும்படி பிராமணனிடந் தரும்படி அவள் தன் தோழிக்குக் குறிப்புக் காட்டினாள். ஐராவதி அதை வாங்கிப் பிராமணனிடங் கொடுத்தாள். அவன் “யாழ் வாசிக்க எனக்குத் தெரியாது. கற்றுத் தந்தால் கற்றுக் கொள்வேன்” என்று கூறினான். “நீர் யாழ் வாசிக்க வேண்டாம். திவவுகளைத் தளர்த்தித் தரவேண்டும்” என்று அவள் கூற, அவன் அதனைக் கையில் வாங்கி திவவைத் தளர்த்தி நரம்புகளை நிறுத்திப் பண் அமைக்க விரலினால் வருடினான். நரம்புகள் சரியாக அமைந்து நன்றாக இசைத்தன. உடனே அவன் அதை மாற்றிப் பகை நரம்பை வைத்தான்.

இவன் யாழைக் கையினால் வாங்கின விதமும் திவவு களைத் தளர்த்திய விதமும் நரம்புகளை விரலினால் தெரித்துப் பார்த்த விதமும் பிறகு வேண்டுமென்றே தவறாக நரம்புகளை அமைத்த விதமும் ஆகிய இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பதுமாவதி இவன் யாழ்க் கலையில் வல்லவன் என்பதை அறிந்தாள். இவனைப் பற்றின உண்மை நிலையை மேலும் சோதித்துத் தெரிந்து கொள்ள வேண்டு மென்று அவள் தோழியிடம் மறைவாகக் கூறினாள்.

கொண்ட வாறும் அவன்கண்ட கருத்தும் பற்றிய வுடனவன் எற்றிய வாறும் அறியா தான்போல் மெல்ல மற்றதன் உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும் செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும் மாழை நோக்கி மனத்தே மதித்தவன் அகத்தை யெல்லாம் முகத்தினி துணர்ந்து புறத்தோன் அண்மை திறப்படத் தெளிந்து தாழிருங் கூந்தல் தோழியைச் சேர்ந்து ‘இவன் யாழறி வித்தகன் அறிந்தருள்' என்றலின்

தோழி இவனை மேலும் சோதிக்கத் தொடங்கினாள்.