உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

சித்தார்த்தர் அவ்வாறே செய்வதாக விடையளித்தார். பிம்பி சாரர் விடைபெற்றுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். வரும் வழியில் அரசருக்குச் சித்தார்த்தரைப்பற்றிய எண்ணமே இருந்தது. 'நிறைந்த இன்ப நலங்களையும் உயர்ந்த அரச நிலையையும் வேண்டுமென்றே மனதறிந்து உதறித் தள்ளிய தூய துறவி இவர். இப்படிப்பட்ட உண்மைத் துறவிகளைக் காண்பது அருமை; அருமை. இவர் கட்டாயம் புத்த நிலையை யடைவார். இவர் எண்ணம் நிறை வேறட்டும். இவர் முயற்சி வெல்வதாக.” தம்முள் இவ்வாறு நினைத்துக் கொண்டே பிம்பிசார அரசர் அரண்மனையை யடைந்தார்.