உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒரு பிடி கடுகு

கௌதமைக்குத் தன் குழந்தைமேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள அக்குழந்தையின் சிரிப்பும் களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும் ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தை யின் இனிய முகம் அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டு வதில் பேரானந்தம். அக்குழந்தையை அவள் கண்மணிபோல் கருதிச் சீராட்டிப் பாராட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்த்து வந்தாள்.

மற்றக் குழந்தைகளுடன் தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, கோழி, குருவி, அணில் முதலியவை களைக் காட்டி அதற்கு மகிழ்ச்சியூட்டுவாள், வானத்தில் நிலவைக் காட்டி அதை அழைக்கச் சொல்வாள். பாட்டுகள் பாடித் தூங்க வைப்பாள். தலை நிறையப் பூக்களைச் சூட்டுவாள். விளையாடுவதற்குப் பொம்மைகளை வாங்கித் தருவாள் அக்குழந்தை அவளுக்கு உயிராக இருந்தது. தலைச்சன் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கு இது இயற்கைதானே.

வளர்பிறை போல வளர்ந்த அக்குழந்தைக்கு ஒரு நாள் நோய் கண்டது. கௌதமை மனவருத்தம் அடைந்தாள். வைத்தியர்களைக் கொண்டு மருந்து அளித்தாள். ஆனால் நோய் அதிகப்பட்டது. கடைசியில் அந்தோ! இறந்துவிட்டது. கௌதமை பெருந்துயரம் அடைந்தாள். தன் குழந்தையைப் பிழைப்பிக்க வேண்டும் என்று விரும்பினாள். “என் கண்மணி பிழைக்க மருந்து கொடுப்போர் இல்லையோ” என்று அரற்றினாள். இறந்த குழந்தையைத் தோள் மேல் வளர்த்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம், “குழந்தையைப் பிழைப்பிக்க மருந்து கொடுப்போர் யாரேனும் இருக்கிறார்களா?” என்று கேட்டாள்; இவள் நிலைமையைக் கண்டு எல்லோரும் மனம் இரங்கினார்கள்; பரிதாபப் பட்டார்கள்; “அம்மா! செத்தவரைப் பிழைப்பிக்க மருந்து இல்லை. வீ ணாக ஏன் வருந்துகிறாய்?" என்று ஆறுதலோடு அறிவுரை கூறினார்கள். கௌதமைக்கு அவர்கள் கூறியது ஒன்றும் மனத்தில் ஏற