உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பேசுவதையும் அமைச்சர் அனாத பிண்டிகர் கேள்விப்பட்டார். பெரிதும் மனம் வருந்தினார். அவனுக்கு நல்லறிவு கொளுத்தி, நன்னெறியில் நிறுத்தக்கூடியவர் பகவன் புத்தர் என்பதை அறிந்து, கேமனைத் தம்முடன் அழைத்துக்கொண்டு, பகவன் புத்தரிடம் சென்றார். சென்று வணங்கி, தாம் வந்த நோக்கத்தை அவருக்குத் தெரிவித்துக் கேமனுக்கு நல்லறிவு புகட்டி யருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தர் பெருமான், கேமனுக்கு நல்லறிவு கொளத்தினார். அதன் சுருக்கம் இது:

பகவரை

"பிறன்மனை நயக்கும் பேதை நான்கு தீமைகளைத் தேடிக் கொள்கிறான். முதலில், பாவம் அவனைச் சேர்கிறது. இரண்டாவது அவன் கவலையின்றித் தூங்கும் நல்லுறக்கத்தை இழந்து விடுகிறான். மூன்றாவது, எல்லோராலும் நிந்திக்கப்பட்டுப் பழிக்கப்படுகிறான். நான்காவது, நரகத்தையடைகிறான். ஆகையால் நல்லறிவுள்ள ஆண்மகன் பிறன்மனைவியை விரும்பமாட்டான்.

"பாவத்தைப் பெற்றுக்கொண்டு மறுமையில் துன்பத்தை யடைகிறபடியினாலும், கூடாவொழுக்கத்தினாலே ஆணும் பெண்ணும் அடைகிற இன்பம் அற்பமானதாகையினாலும், மனத்தில் எப்போதும் அச்சம் குடிகொள்ளுகிறபடியாலும், அரசனால் கடுமையாகத் தண்டிக்கப் படுவதினாலும், அறிஞனாகிய ஆண்மகன் பிறன் மனைவியை விரும்பி ஒழுக்கந்தவறி நடப்பது கூடாது.

புத்தர் பெருமான் அருளிய இந்த நல்லுபதேசத்தைக் கேட்ட கேமன் அன்று முதல் தீயொழுக்கத்தை, பிறன் மனைவியை நாடும் இழிசெயலை விட்டு, நல்லொழுக்கத்தோடு நடந்துகொண்டான். அவன் திருந்தியதைக் கண்டு எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

குறிப்பு : பிறன்மனை விரும்பியொழுகும் தீயொழுக் கத்தைப் பற்றிப் புத்தர் பெருமான் அருளிய பொன்மொழிகளோடு, திருவள்ளுவர் அருளிய நன்மொழிகளையும் மனத்திற் கொள்வது நலம்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறன்இல் புகல்.