உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

பகவன் புத்தர் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கிறார். பௌத்தப் பிக்குகளும் நகர மக்களும் அமர்ந்து பகவர் அருளும் அறமொழிகளைச் செவி செவி மடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தற் செயலாகப் படசாரி' அவ்விடத்தில் ஓடி வந்தாள். கூட்டத்தில் நுழையப் பார்க்கிறாள். அங்கிருந்தவர்கள், "இங்கே வராதே அப்படிப் போ, எட்டிப் போ” என்று விரட்டினார்கள். புத்தர் பெருமான் கண்டார். அவள் மனம் துன்பத்தினால் குழப்பம் அடைந்திருப்பதை அறிந்தார். அவளை விரட்டாதீர்கள். அவள் இங்கே வரட்டும் என்று

66

அ அரு

ளினார். கூட்டத்தில் அவளுக்கு வழிவிட்டார்கள். கூட்டத்தில் புகுந்து வந்து "பேந்தப் பேந்த" விழித்தாள். கூட்டத்தில் அமைதி. என்ன நடக்கப்போகிறது என்றறியக் கூட்டத்தில் ஓர் ஆவல்.

66

'குழந்தாய்! உன் மனத்தைச் சிதறவிடாதே. மனத்தைத் தன் நிலையில் நிறுத்து” என்று உரத்த குரலாகவும் கம்பீரமாகவும் கணீரென்று அருளிச் செய்தார் பகவன் புத்தர், அவர் குரலில் ஏதோ மந்திர சக்தி பொருந்தியிருப்பதுபோல் தெரிந்தது. அக்குரலில் ஓர் ஆணை-கட்டளை தொனித்தது.

இந்தக் கட்டளை வந்த ஓசை வழியே படசாரி மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பினாள். அவள் கண்கள் பகவர் முகத்தில் பதிந்தன. ரண்டு நிமிடம் அவர் முகத்தையே அவள் பார்த்தாள். அந்த முகத்தில் எப்போதும் உள்ளதுபோல் சாந்தியும் தெய்வீக ஒளியும் காணப்பட்டன. எல்லோரும் அவளுடைய முகத்தையே பார்த்தனர். அவள் கண்களில் நிலைத்திருந்த பயங்கரத் தோற்றம் சிறிதுசிறிதாக மறைந்துவிட்டது. முகம் சாந்தம்அடைந்தது. சிதறி உடைந்திருந்த அவள் மனம் குவிந்து இயற்கை நிலையை அடைந்தாள். தன் உணர்வு வரப் பெற்றாள். அப்போதுதான், பெருங்கூட்டத்தின் இடையிலே தான் நிற்பதையும், தன் உடை கிழிந்துவிலகி அரை நிர்வாணமாக இருப்பதையும் உணர்ந்தாள். உடனே வெட்கத்தினால் தலை குனிந்து உடம்பை இரண்டு கைகளினாலும் மூடிக்கொண்டு அவ்விடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் துணி ஒன்றை அவள் மேல் எறிந்தார். அதை எடுத்து அவள் உடம்பில் சுற்றிப் போர்த்திக்கொண்டு எழுந்தாள். நேரே சென்று பகவர் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்.