உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் 51

சீமான் பெயரைச் சொல்லி, அவர் வீட்டுக்குப் போவதாகக் கூறினாள். அதைக் கேட்டதும் அந்த ஆளின் முகத்தில் வருத்தக் குறி காணப்பட்டது.

66

'அவர் வீட்டில் எல்லோரும் சுகந்தானே!" என்று கேட்டாள்.

"ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்......" என்று இழுத்தான் வருத்தத்துடன், அவளுக்கு மனம் துடித்தது. “என்ன? அவருக்கு ஒன்றும் இல்லையே! சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டாள் ஆவலுடன்.

"நேற்று இரவெல்லாம் நல்ல மழை பெய்ததல்லவா?"

“ஆமாம்!”

“வீடு இடிந்து விழுந்து அவரும் அவர் மனைவியும் மகனும் இறந்து போனார்கள்.” இதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் ஆனாள்.

“அதோ, புகைகிறது பார்! அவர்களைக் கொளுத்தும் புகைதான் அது! என்று அந்தப் பக்கமாகக் கையைக் காட்டினான். அந்தப் பக்கமாகத் திரும்பினாள். சுடுகாட்டிலிருந்து பெரும் புகை எழும்பி வானத்தில் போகிறதைக் கண்டாள்.

"அவர்களுக்கும் இந்தக் கதியா!” என்று நினைத்தபோது அவள் மனம் பித்துப் பிடித்ததுபோல் ஆயிற்று. மூளை குழம்பிற்று. பைத்தியம் பிடித்தவள்போல் ஓடினாள். ஆடை நெகிழ்ந்துவிட்டதையும் அவள் சரியாக உடுத்தவில்லை. பித்துக் கொள்ளிபோல், பைத்தியக்காரிபோல் னாள். தன் நினைவை இழந்தாள். மனம் போனபடி தெருத் தெருவாகச் சுற்றிலைந்தாள். அவளைக் கண்டவர்கள் துரத்தி விரட்டினார்கள். “தூரப் போ! இங்கே வராதே! போ, போய்விடு” என்று துரத்தினார்கள். ஆடை விலகி நெகிழ்ந்திருந்தது. அது அவளுக்குத் தெரியவில்லை.

உணவையும் உறக்கத்தையும் மறந்தாள். இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் திரிந்து அலைந்துகொண்டேயிருந்தாள். அவளை ஏன் என்று கேட்போர் இந்த உலகத்திலே ஒருவரும் இல்லை. அவள் ஏன் இந்த நிலையையடைந்தாள் என்று ஒருவரும் யோசிக்கவில்லை. இவளைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இவ்வாறு பல திங்கள் கழிந்தன.