உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

59

"இப்போது என்ன செய்வது! கயிறுகள் எல்லாம் அறுந்து விட்டன. அக்கம் பக்கத்துப் பிள்ளைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு, இப்படி என் கட்டிலைப் பாழ்படுத்திவிட்டீர்கள். இப்பொழுது நான் எங்கே படுப்பது? நானோ ஏழை. எனக்குப் படுக்கப் பாயும் இல்லையே” என்று கோபமாகக் கண்டித்தான்.

66

'அப்பா! நான் என்ன செய்வேன். அந்தப் பாழும் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்துவிட்டுப் போகின்றார்கள். நாளைக்கு ஒரு ஆளைக் கூப்பிட்டுக் கட்டிலைச் சரிசெய்து வைக்கிறேன். கோபப் படாதீர்கள்” என்று கூறினாள். பிறகு அடுத்த அறையில் படுத்திருக்கும் தன் மகள் மல்லிகைக்குக் கேட்கும்படி, “அம்மா, மல்லிகை! உன் பாயில் படுத்துக் கொள்ளஅவருக்குக் கொஞ்சம் இடம் கொடு” என்று உரத்துக் கூறினாள். மல்லிகை தன் பாயில் சிறிது இடம் ஒதுக்கிக் கொடுத்து “இதோ இடம் இருக்கிறது. படுத்துக்கொள்ளுங்கள்” என்று அழைத்தாள். கும்பகோசன் அங்குச் சென்று அவள் பாயில் படுத்துக்கொண்டான். மல்லிகை கூச்சலிட்டாள். நடந்த செய்தியை அறிந்த சண்பகம் அடுத்த அறையில் படுத்துக்கொண்டே “ஏன் மல்லிகா! என்ன?” என்று கேட்டாள். மல்லிகை நடந்ததைக் கூறினாள். சண்பகம் கோபப்படவில்லை. "சரி நடந்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்வது? உன்னையும் ஒருவருக்குக் கலியாணம் செய்து கொடுத்துத் தானே ஆகவேண்டும். அவரும் மணம் செய்துகொள்ள வேண்டியவர் தானே. உனக்கும் அவருக்கும், இப்படிப் பிராப்தம் இருக்கிறதுபோல் இருக்கிறது" என்று சொன்னாள். அன்று முதல் கும்பகோசனும் மல்லிகையும் கணவனும் மனைவியும் ஆக இருந்தார்கள். சில நாட்கள் ஆ சென்றன.

சண்பகம் அரசருக்கு இரகசியமாகச் செய்தி சொல்லி அனுப்பினாள். அரண்மனை வேலைக்காரர்களுக்கு ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என்றும், அந்ந நாளை அவர்கள் சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்றும் விடுமுறை கொண்டாடாதவர்கள் தண்டனை அடைவார்கள் என்றும் ஆணையிடும்படி தெரிவித்தாள். அரசர் அவ்வாறே கட்டளை யிட்டார். அரசசேவகன் ஒருவன் வேலைக்காரர் விடுதியில் பறையறைந்து அரசர் கட்டளையைக் கூறினான்.

66

கும்பகோசனிடம் சண்பகம் இந்தச் செய்தியைச் சொன்னாள். அரண்மனை வேலைக்காரர்களுக்கு விடுமுறையாமே. விடுமுறை