உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கொண்டாடாதவர்கள் தண்டனை அடைவார்களாமே

கூறினாள்.

என்று

“ஆமாம். அப்படித்தான் அரசர் உத்தரவு. அதனால் எனக் கென்ன? நான் ஏழை. என்பாடே பெரும்பாடாக இருக்கிறது. விடுமுறை கொண்டாட எனக்குக் காசு ஏது?” என்று கூறினான்.

66

'அப்படியல்ல. அரசர் ஆணையை மீறக்கூடாது. எப்படி யாவது கடன் வாங்கியாவது விடுமுறை கொண்டாடுங்கள்” என யோசனை கூறினாள் சண்பகம்.

கும்பகோசன் சற்று யோசித்தான். “அப்படித்தான் செய்ய வேண்டும். எங்கேயாவது போய்க் கடன் கேட்டு வாங்கி வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான். போனவன் இருட்டின பிறகு இரவு வேளையில் வீட்டுக்கு வந்தான். சண்பகம், “காசு எங்கேனும் கிடைத்ததா?” என்று கேட்டாள்.

66

வருந்தித் தேடி இரண்டு காசு கொண்டு வந்தேன். கடனாகக் கிடைத்தது” என்று கும்பகோசன் கூறி, அவளிடம் காசுகளைக் கொடுத்தான். அவற்றைக் கையில் வாங்கிப் பார்த்து ஏதோ புதுமையைக் கண்டவள் போல் வியப்படைந்தாள். ஆனால், வியப்பை மறைத்துக் கொண்டு விருந்துக்கு வாங்கவேண்டிய பொருள்களைப்பற்றிப் பேசினாள். என்னென்ன பலகாரங்கள் செய்வது என்பதைப் பற்றி முடிவு கட்டினார்கள். பின்பு எல்லோரும் நித்திரை செய்யப் போய்விட்டார்கள்.

சண்பகம் காசைக் கண்டு வியப்படைந்ததற்குக் காரணம் யாதெனில், அது அப்போது வழங்கப்படாத மிகப் பழைய பொற்காசு. 'இஃது இப்போது கிடைக்காதே; இவனுக்கு எப்படிக் கிடைத்தது’ என அதிசயப்பட்டாள். அரசர் கூறியதுபோல இவன் செல்வந்தனாகத்தான் இருக்கவேண்டும். இது கடன் வாங்கிய காசு அல்ல என்று தீர்மானித் தாள். ஆகவே, அந்தக் காசுகளைப் பத்திரப்படுத்திவிட்டுத் தன் கைக் காசுகளைச் செலவு செய்து விருந்துக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்து பலகாரங்களையும் உணவையும் செய்து வைத்தாள். விருந்து சாப்பிட்டவுடன், கும்பகோசன் விடுமுறை கொண்டாட வெளியே போய் விட்டான்.

சண்பகம், கும்பகோசன் தந்த இரண்டு பெற்காசுகளையும், வெகு பத்திரமாக ஒரு சேவகனிடம் கொடுத்து, அரசரிடம் சேர்க்கும்படியும்,