உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நச்சுப் பாம்பு

நள்ளிரவு; சிராவத்தி நகரத்தின் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டுச் சேவகர் கண்ணுறங்காமல் காவல்புரிகின்றனர். நகர மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் அமைதி. இந்த நள்ளிரவிலே கள்ளர் சிலர் கோட்டைக்குள் புகுந்தார்கள். மதில்சுவரில் ஏறி அவர்கள் உள்ளிறங்கவில்லை. நகரத்துக் கழிவுநீர், அகழியில் விழுகிற பெரிய சுருங்கை (சாக்கடை) வழியாகப் புகுந்து கள்ளர்கள் நகரத்திற்குள்ளே நுழைந்தார்கள். காவல் சேவகர் கண்களிற்பாடாமல், அந்நகரத்துச் செல்வப் பிரபுவின் மாளிகையை அடைந்தார்கள். சுவரில் கன்னம் வைத்து உள்ளே புகுந்து பொற் காசுகளையும் தங்க நகைகளையும் இரத்தினமாலை, முத்துமாலை முதலியவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு மறுபடியும் சாக்கடை வழியே அகழியில் இறங்கி வெளியே போய்விட்டார்கள். போகும் கள்ளர்கள் நகரத்துக்கப்பால் உள்ள வயல்களின் வழியாக நடந்தார்கள். வைகறைப்போது ஆயிற்று. வயலில் ஒருபுறம் உட்கார்ந்து, களவாடிய பொருள்களைப் பங்கிடத் தொடங்கினார்கள்.

கள்ளர்கள் களவாடிய பொருள்களைப் பங்கிடுவதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும்போது சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டது. “சுருக்காக நடங்கடா” என்னும் குரலும் கேட்டது. கள்ளர்கள், அரச சேவகர் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று கருதி அச்சங்கொண்டு எழுந்து ஓட்டம் பிடித்தார்கள். உயிருக்குத் தப்பி ஓடுகிற அவசரத்தில் பொற்காசு மூட்டையையும் முத்துமாலைகளை யும் விட்டு ஓடிவிட்டார்கள்.

கள்ளர்கள் நினைத்ததுபோல நகரக் காவலர் அங்கு வரவில்லை. அங்கு வந்தவன் அந்த வயலுக்குரிய குடியானவன். விடியற்காலையில் வயலை உழுவதற்காக அவன் எருதுகளை ஓட்டிக்கொண்டு வந்தான். அவன் எருதுகளிடத்தில் அன்புள்ளவன். அவன் எருதுகளிடம் சுருக்காக நடங்கடா” என்று கூறியதைத் தான் கள்ளர் தங்களைச் சேவகர் பிடிக்க வருவதாகக் கருதி ஓட்டம் பிடித்தார்கள். குடியானவன் தன் வயலுக்கு வந்ததும் எருதுகளை ஏரில் பூட்டி நிலத்தை உழத் தொடங்

66