உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

கினான். கள்ளர் தன் வயலில் தங்கியிருந்ததும், தன் வருகையை யறிந்து அவர்கள் ஓடிவிட்டதையும் அவன் அறியவில்லை. தன் வயலில் ஒரு பக்கத்திலே பொற்காசு மூட்டையும் முத்து மாலையும் கிடப்பது அவனுக்குத் தெரியாது. வைகறை இருட்டிலே வயலை உழுது கொண்டிருந்தான்.

அந்தக் காலத்தில் பகவன் புத்தர் சிராவத்தி நகருக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்திலே எழுந்தருளியிருந்தார். விடியற் காலையில் ஆசனத்தில் அமர்ந்து, அன்று உலகத்திலே நடைபெறப் போகிற விசேஷ காரியங்களைத் தமது ஞானக்கண்களாற் காண்பது அவருடைய வழக்கம். இவ்வழக்கப்படி பகவன் புத்தர் ஞானக் காட்சியில் அமர்ந்திருந்தபோது, கள்ளர்கள் விட்டுச் சென்ற பொற்காசு மூட்டையினால் இந்தக் குடியானவனுக்குக் கொலைத் தண்டனை கிடைக்கப்போவதை அறிந்தார். குற்றமற்ற இக்குடியானவன் வீணாக உயிரிழக்கப்போவதைத் தடுக்கவேண்டும் என்று திருவுளங் கொண்டார். தம்முடைய அணுக்கத் தொண்டரான ஆனந்தரை விளித்து “ஆனந்த! சற்று உலாவி வரலாம் வா” என்றார்.

66

‘அப்படியே” என்று ஆனந்தர் பகவருடைய கைத்தடியைக் கொண்டுவந்து கொடுத்து வணங்கினார்.

இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள். குடியானவன் உழுது கொண்டிருந்த வயலின் பக்கமாக அவர்கள் வந்தார்கள். பகவரைக் கண்ட குடியானவன் உழுவதை நிறுத்தி, அவரிடம் வந்து வணங்கிக் கும்பிட்டான். பிறகு ஏரைப் பிடித்து முன்போல உழத்தொடங்கினான். பகவர், ஆனந்தருடன் நடந்தார். ஒரு பக்கத்தில் பணப்பையும் முத்து மாலையும் கிடப்பதைக் கண்டார். அவற்றை ஆனந்தருக்குக் காட்டி, 'ஆனந்த! இதோ பார். ஒரு நச்சுப்பாம்பு” என்று கூறினார்.

66

அவற்றைக் கண்ட ஆனந்ததேரரும், “ஆமாம், பகவரே! கொடிய நச்சுப்பாம்பு” என்று சொன்னார். இவ்வாறு பேசிக் கொண்டே இருவரும் போய்விட்டார்கள்.

இவர்கள் பேசியதைக் கேட்ட குடியானவன், தனக்குள் எண்ணினான்; 'இந்த வயலைக் காலா காலமாக உழுது பயிரிட்டு வருகிறேன். இதுவரையில் ஒரு பாம்பையும் இங்கு நான் கண்டதில்லை இவர்கள் கூறுகிறபடி இங்கு நச்சுப் பாம்பு இருக்குமோ! போய் அதைக்