உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள் / 83 கொன்றுபோடுகிறேன்' என்று பலவாறு நினைத்து அவன் உழுவதை நிறுத்தித் தாற்றுக்கோலைக் கையில் எடுத்துக்கொண்டு அவ்விடத் திற்குப் போனான். போனவன், அங்குப் பாம்பைக் காணவில்லை. பொற்காசுகள் நிறைந்த பணப்பையும் முத்துமாலையும் கிடப்பதைக் கண்டான். கண்டு திகைத்தான். இதைத்தான் 'நச்சுப் பாம்பு' என்று பகவன் புத்தரும் ஆனந்ததேரரும் கூறினார்கள் என்று அறிந்தான். என்ன செய்வதென்று தோன்றாமல் தயங்கினான். பிறகு, மண்ணை வாரி அதன் மேல் போட்டுவிட்டுப் பழையபடி ஏர் உழுது கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தவுடன் சிராவத்தி நகரத்துச் சீமான் மாளிகையில் எல்லோரும் விழித்துக்கொண்டார்கள். மாளிகையில் கன்னம் வைக்கப் பட்டிருப்பதையும் பொன்னும் பொருளும் களவாடப்பட்டிருப்பதையும் அறிந்தார்கள். கள்வரைக் கண்டு பிடிப்பதற்காகப் பிரபுவின் வேலைக் காரர்கள் புறப்பட்டுப் பல திசைகளிலும் சென்றார்கள். அவர்களில் சிலர் நகரத்துக்கு வெளியே வயல் பக்கமாகக் காலடிச் சுவடுகள் இருப்பதைக் கண்டு அவற்றின் வழியே போனார்கள். கடைசியில் கள்வர் தங்கியிருந்த வயலுக்கு வந்தார்கள். அங்கு வயலை உழுது கொண்டிருந்த குடியானவனையும் ஒரு புறத்தில் அரைகுறையாக மறைக்கப்பட்ட பணப் பையையும் கண்டார்கள். குடியானவன் மேல் அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இரவில் களவாடிய பணமூட்டையை வயலில் வைத்துவிட்டு, தன்னைச் சந்தேகப் படாமலிருப்பதற்காக ஏர் உழுகிறான் என்று கருதினார்கள். பணப்பையையும் முத்து மாலையை யும் எடுத்துக்கொண்டு குடியானவனையும் பிடித்துக் கொண்டு போனார்கள். போய் அரசன் முன்பு நிறுத்தினார்கள்.

அரசர் வழக்கை விசாரணை செய்தார். கிடைத்த சான்றுகளைக் கொண்டு குடியானவன் கள்வனே என்று தீர்மானித்து, அக்காலத்து முறைப்படி களவுக் குற்றத்திற்குக் கொலைத்தண்டனை கொடுத்தார். ஆகவே, சேவகர் குடியானவனைக் கொல்லக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோனார்கள். போகும் வழியில் அவனை அடித்துக் கொண்டேபோனார்கள். சேவகர் அடித்த போதெல்லாம் குடியானவன், அன்று காலையில் புத்தர் பெருமானும் ஆனந்ததேரரும் பேசிய மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறினான். “இதோ பார். ஆனந்த! நச்சுப்பாம்பு.” "ஆமாம். பகவரே! கொடிய நச்சுப் பாம்பு. இந்த மொழிகளைத் தவிர அவன் வேறொன்றையும் கூறவில்லை. இதைக் கேட்ட சேவகர் வியப்படைந்தனர். “புத்தர் பகவான் பெயரையும்

و,