உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

117

அறிந்தேன். நான் மண்ணுலகம் சென்று என்னாலான புண்ணியச் செயல்களைச் செய்வேன்” என்று கூறினார்.

இவ்வாறு ஏழு நாட்கள் சென்றபிறகு, தேவலோகத்து அரசன், குட்டிலப் புலவனைத் தேரில் ஏற்றி வாரணாசி நகரத்தில் கொண்டுபோய் விட்டுவரும்படி மாலதிக்குக் கூறினான். வார ணாசி வந்த போதிசத்துவர் தாம் தேவலோகத்தில் கண்டவற்றை மக்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள், தாங்களும் தங்களால் இயன்ற அளவு புண்ணியச் செயல்களைச் செய்வதாக உறுதி செய்து

கொண்டார்கள்.

இந்தக் கதையைக் கூறியபிறகு, பகவன் புத்தர் இப்பிறப்பை முற்பிறப்போடு ஒப்பிட்டுக் காட்டினார். அந்தப் பிறப்பிலே தேவதத்தன் மூசிலனாகவும், அநுருத்தர் சக்கனாகவும், ஆனந்தர் அரசனாகவும், ததாகதர் குட்டிலப் புலவனாகவும் இருந்தோம் என்று கூறினார்.

"