உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. காரண்டிய ஜாதகம்

பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது இந்தக் கதையைச் சாரிபுத்திரன் பொருட்டுக் கூறினார்.

புத்தரின் தலை மாணவராகிய சாரிபுத்தர் தம்மிடம் வருகிற வேடர், மீன்பிடிப்போர் முதலியவர்களுக்கும் பஞ்ச சீலங்களையும், அற நெறியையும் போதித்தார். அவர்களும், அவரிடம் கொண்டுள்ள நன் மதிப்பின் பொருட்டு அவர் கூறும் அறவுரை களையெல்லாம் கேட்டார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பது இல்லை. இதைக் கண்ட சாரிபுத்தர், மற்ற பிக்குகளுடம் இதைச் சொல்லி வருந்தினார். அவர்கள் அதைக் கேட்டு இவ்வாறு கூறினார்கள். “தேரரே! அவர்கள் விரும்பாத அறநெறியைத் தாங்கள் அவர்களுக்குக் கூறுகிறீர்கள். தங்கள் மீது உள்ள நன்மதிப்புக்காக அவர்கள் தாங்கள் கூறுவதைப் பணிவுடன் கேட்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு அறவுரை கூறுவதை நிறுத்தி விடுங்கள்.

இதைக்கேட்ட சாரிபுத்தர் மனத்தாங்கல் அடைந்தார். பிக்குகள் இதைப்பற்றித் தமக்குள் பேசிக்கொண்டிருந்தபோது, பகவன் புத்தர் அவ்விடம் வந்து, அவர்கள் பேசுவது இன்னதென் றறிந்தார். அறிந்து, 'பிக்குகளே! இப்பிறவியில் மட்டும் அல்ல, முற் பிறவியிலும்கூட, விரும்பிக் கேட்காதவர்களுக்கும் இவர் அறவுரை போதித்தார்” என்று கூறி, இந்தக் கதையைச் சொன்னார்:

66

வாரணாசியைப் பிரமதத்த அரசன் ஆண்ட முன்னொரு காலத்திலே, போதிசத்துவர் ஒரு பிராமண குடும்பத்திலே பிறந்து, தக்க சீல பல்கலைக் கழகத்திலே, உலகப் புகழ்படைத்த ஒரு ஆசிரியரிடத் திலே மாணவராக அமர்ந்தார். இந்த ஆசிரியர், தான் காண்கிற எல்லோருக்கும், வேடர், வலைஞர், கொலைஞர் முதலியவர்களுக்குங் கூட, அறநெறிகளையும் நல்லொழுக்கங்களையும், அவர்கள் அதைக் கேட்க விரும்பாமலிருந்தும் போதித்து வந்தார். அவர் போதனைகளை அவர்கள் கேட்டபோதிலும், அதன்படி அவர்கள் நடப்பதில்லை. இதைப்பற்றி இவர் தமது மாணவர்களிடம் பேசினார்.