உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

119

"ஐய! அவர்கள் விரும்பிக் கேளாததைத் தாங்கள் வலியச் சென்று அவர்களுக்குப் போதிக்கிறீர். ஆகவே, அவர்கள் அதன் படி நடப்ப தில்லை. இனிமேல், விருப்பம் உள்ளவருக்கு மட்டும் உபதேசம் செய்து, விருப்பம் இல்லாதவருக்கு உபதேசம் செய் யாமல் இருங்கள் என்று மாணவர்கள் கூறினார்கள். இவர்கள் சொல்லியதைக் கேட்டு ஆ சிரியர் மனவருத்தம் அடைந்தார். ஆனாலும், தாம் பார்க்கிற எல்லோருக்கும் அறவழி கூறுவதை நிறுத்தவே இல்லை.

இப்படி நிகழும்போது ஒருநாள், அருகில் இருந்த ஒரு ஊரிலிருந்து சிலர் வந்து, பிராமணர்களுக்குத் தானம் வழங்கப்போவ தாகவும், ஆசிரியர் அவர்களும் மாணவர்களோடு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். ஆசிரியர், காரண்டியன் என்னும் பெயருள்ள தமது தலைமை மாணவரை அழைத்து, “நான் போய் தானம் பெறமுடிய வில்லை. நீ மற்ற ஐந்நூறு மாண வர்களையும் அழைத்துக்கொண்டு போய், தானம் பெற்று என் னுடைய பங்கையும் கொண்டுவா” என்று சொல்லி, அவனை அனுப்பினார். மாணவன் கிராமத்துக்குப் போய் தானத்தைப் பெற்றுக்கொண்டு தன் ஆசிரியரிடம் திரும்பினான். வருகிற வழியிலே, ஒரு மலைக்குகையைக் கண்டான். கண்டு, தனக்குள் இவ்வாறு எண்ணினான்: 'நம்முடைய ஆசிரியர், தாம் பார்க்கிற எல்லோருக்கும் அவர்கள் விரும்பாமல் இருந்துங்கூட, உபதேசம் செய்துவருகிறார். இனிமேல் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்களுக்கு மட்டும் உபதேசிக்குபடி செய்வேன்.' இவ்வாறு எண்ணிய தலை மாணவன், பெரிய கல்லைத் தூக்கி அதைக் குகைக்குள் எறிந்தான். இவ்வாறே பெரிய பெரிய பாறைகளை எடுத்துக் குகைக்குள்ளே எறிந்தான்.

இதைக்கண்ட மற்ற மாணவர்கள், “என்ன ஐயா இது! என்ன செய்கிறீர்? ஏன் பாறைகளை எடுத்துக் குகைக்குள் போடுகிறீர்?” என்று கேட்டார்கள். காரண்டியன் விடை கூறாமல், பாறைகளை எடுத்துக் குகைக்குள்ளே எறிந்து கொண்டிருந்தான். மாணவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் போய்த் தமது ஆசிரியரிடம் இதைச் சொன்னார்கள். ஆசிரியர் வந்து, காரண்டி யனிடம் இவ்வாறு கேட்டார். "காட்டில் உள்ள இந்தக் குகையில் ஏன் கற்களைப் போடுகிறாய்? மலைக்குகையைக் கல்லினால் நிரப்பி மூடப்போகிறாயா?"

66