உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. அவாரிய ஜாதகம்

இந்த ஓடக்காரன் கதையைப் பகவன் புத்தர் ஜேதவன ஆராமத்தில் இருந்தபோது கூறினார். அறிவற்ற மூடனான இவன், நன்மை தீமைகளை உணராமல், முரடனாகவும், முன்கோபியாகவும்,

"

வேசமுள்ளவனாகவும் இருந்தான். ஒருநாள் வெளியூரிருந்து ஒரு பிக்கு பகவன் புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். வழியிலே அசிராவதி யாற்றைக் கடக்கவேண்டி இருந்த படியால், ஓடக்காரனிடம், “நான் அக்கரைக்குப் போகவேண்டும். ஓடத்தில் ஏறலாமா?” என்று கேட்டார். "சாமி! இப்போது நேரமாய்விட்டது. இவ்விடத்திலேயே தங்கி விடுங்கள் என்று ஒடக்காரன் சொன்னான். “நான் இங்குத் தங்க முடியாது. இப்போதே போகவேண்டும்” என்றார் பிக்கு. ஓடக்காரன் சினங்கொண்டு, “அப்படியானால் படகில் ஏறு” என்று சொல்லிப் படகைச் செலுத்தினான். சுக்கானை முரட்டுத்தனமாகத் திருப்பிப் படகில் தண்ணீர் சிதறும்படி செய்தான். அதனால், பிக்குவினுடைய ஆடை நனைந்து ஈரமாய்விட்டது. நெடுநேரம் கழித்து இருட்டான உடனே அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான். பிக்கு, ஆசிரமத்துக்குச் சென்று பகவன் புத்தரைப் பார்க்கமுடியவில்லை. அடுத்தநாள் போய், புத்தரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தார். புத்தர் பெருமான் அவரை வரவேற்று "எப்பொழுது வந்தீர்?" என்று கேட்டார். "நேற்று வந்தேன்” என்றார். “நேற்றே வராமல் ஏன் இன்று வந்தீர்?" என்று கேட்க, பிக்கு நடந்ததைச் சொன்னார். அப்போது புத்தர் கூறினார்: “இப்போது மட்டும் அவன் இப்படிச் செய்யவில்லை. முற்காலத்திலும் அவன் மூர்க்க னாகவும், முரடனாகவும் இருந்தான். ஓடத்தில் போகிறவர்களைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தான் என்றார். அந்தக் கதையைக் கூறும்படி பிக்கு கேட்க புத்தர் இவ்வாறு கூறினார்:

ஓரானொரு காலத்திலே, பிரமதத்த அரசன் வாரணாசியை அரசாண்டபோது, போதிசத்துவர் பிராமண குடும்பத்தில் பிறந் திருந்தார். அவர் தக்கசீல பல்கலைக்கழகத்திலே கல்வி கற்றுத் தேர்ந்த பிறகு துறவியானார். துறவு பூண்ட அவர் இமயமலைக் காட்டிலே