உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

நெடுங்காலம் இருந்து காய்கனிகளை உண்டு காலங் கழித்தார். பிறகு, உப்பும் காடியும் பெறுவதற்காக வாரணாசிக்கு வந்தார். வந்தவர், அரண் மனையை அடுத்த சோலையிலே தங்கி அடுத்தநாள் பிச்சைக்காக நகரத்திற்குச் சென்றார். அப்போது அரசன் அரண்மனை வாயிலில் அவர் செல்வதைக்கண்டு அவருடைய ஒழுக்கத்திற்கு மகிழ்ந்து அவரை அழைப்பித்து உணவு கொடுத்தான். பின்னர், அவரைத் தனது தோட்டத்திலே தங்கும்படி கேட்டுக்கொண்டு, நாள்தோறும் அவரிடம் வந்து வணங்கினான்.

அரசன் தன்னிடம் வரும்போதெல்லாம் துறவி இந்த அறி வுரையைக் கூறினார்: “அரசர் பெருமானே! அரசன் தன் நாட்டை நீதியோடும் நேர்மையோடும் அரசாள வேண்டும். தீமைகளை நீக்கி நன்மைகளைச் செய்து பொறுமையும், அன்பும், ஆதரவும் உள்ளவனாய் இருக்கவேண்டும். மன்னர் பெருமானே! சினத்தைத் தவிர்த்துப் பொறுமையை மேற்கொள்ளவேண்டும். கோபம் இல்லாத அரசன் போற்றத்தக்கவன். நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், கடலில் இருந்தாலும், கரையில் இருந்தாலும் கோபம் இல்லாமல் பொறுமையைக் கொள்க. இதுதான் உமக்கு நான் கூறும் நல்லுரை.”

இவ்வாறு போதிசத்துவர் நாள்தோறும் அரசனுக்கு அறிவுரை வழங்கினார். அரசர் மகிழ்ந்து, நூறாயிரம் காசு வரு மானம் உள்ள ஊர் ஒன்றை அவருக்குத் தானமாக வழங்கினான். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் பன்னிரண்டு ஆண்டு அங்குத் தங்கியிருந்தார். ஒருநாள் அவர் தமக்குள் எண்ணினார்: 'நெடுங்காலம் இங்குத் தங்கிவிட்டேன். உலகத்தில் பிரயாணம் செய்து பின்னர் வருவேன்' என்று எண்ணி, அரசனுக்குக் கூறாமல், தோட்டக் காரனிடம், “நாட்டில் சுற்றித்திரிந்து பிரயாணம் செய்யப்போகிறேன். பிறகு திரும்பி வருவேன். இதை அரசர் பெருமானிடம் சொல்லுக” என்று கூறிப் பயணம் புறப்பட்டார்.

புறப்பட்டுப் போனவர் கங்கையின் கரையிலே ஒரு துறையை யடைந்தார். அந்தத் துறையிலே மூர்க்கனான ஓடக்காரன் ஒருவன் இருந்தான். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் வேறுபாட்டை அவன் அறியான். அவாரியன் என்னும் பெயருள்ள அந்த ஓடக்காரன், கங்கையைக் கடந்து போகிறவர்களிடம் முதல் காசு பெற்றுக் கொள்ளாமல், படகில் ஏற்றிக்கொண்டு அக்கரைக்குக் கொண்டுபோய்