உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 11

களாம். நாளைக்கு எழுநூற்றுத் தானம் செய்தபிறகு நான் நாட்டை விட்டுப் போய்விடவேண்டும்” என்று விளக்கம் கூறினார் இளவரசர்.

66

"தாங்கள் மட்டும் காடு செல்வது முறையன்று. தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம், களிறு செல்லும் இடங்களுக் கெல்லாம் பிடியானை பின் தொடர்ந்து செல்லுவதுபோல, நானும் செல்வேன். நான் மட்டும் தனியே இருக்க இயலாது. தனியே விட்டுச் செல்வதாக இருந்தால், தீ வளர்த்து அத்தீயில் விழுந்து இறப்பேன். நமது குழந்தைகளுடன் தங்களோடு வருவேன். என்னால் தங்களுக்கு யாதொரு துன்பமும் உண்டாகாது” என்று அரசகுமாரி கூறினார். பிறகு இமயமலைக் காட்டைப் பற்றித் தாம் அங்குச் சென்று பழகியவர்போலப் புகழ்ந்து பேசினார்.

"மரம் அடர்ந்த காடுகளில் நமது குழந்தைகள் சிரித்து விளை யாடுவதைக் கண்டால் தாங்கள் தங்களையே மறந்து விடுவீர்கள். காட்டில் சென்று வாழும்போது நமது சிறுவர்களின் மழலைப்பேச்சு செவிக்கு இனிமையைத் தரும். அருமைக் குழந்தைகள் செடிகளை வளர்ப்பதைக் கண்டால் மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் குதித்துக் கூத்தாடி விளையாடு வதைக் கண்டால் மெய்மறந்து விடுவீர்.அவர்கள் பூக்களைப் பறித்து வந்து மாலைதொடுத்து விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.”

66

"அறுபது வயதுள்ள யானை தலைமை தாங்கி முன்னே நடக்க அதைப் பின்தொடர்ந்து செல்லுகிற யானைகளின் கூட்டத்தைக் கண்டால் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! காடுகளில் விலங்குகள் கத்துவது காதுக்கு மகிழ்ச்சியளிக்கும். சூரியன் மறைகிற மாலை வேளையில் மான் கூட்டங்கள் வருவது இனிய காட்சி. ஆற்றங் கரையில் அலைகள் மோதுவதும் நீர் அறமகளிரின் இன்னிசைப் பாட்டும் உள்ளத்தைக் கவரும். மலைக்குகைகளில் ஆந்தைகள் அலறுவதும், காண்டாமிருகமும் காட்டெருமையும் புலியும் சிங்கமும் கூவிக் கர்ச்சிப்பதும் காட்டையே அதிரும்படிச் செய்யும். மலைகள் மேலே ஆண் மயில்கள் தோகை விரித்துப் பெண்மயில்கள் காணும்படி ஆடும் காட்சி காணத்தக்கது. பல வர்ணப் பறவைகள் மரங்களில் அமர்ந் தும் பறந்தும் பாடுவது செவிக்கு இனிமையாக இருக்கும். பூக்கும் காலங்களில் மரங்கள் பூத்து இனிய நறுமணத்தை அள்ளி வீசும். இவை எல்லாம் இனிமை தருவன” என்று தான் காட்டிலே நெடு நாள் பழகியவர்போல இளவரசியார் கூறினார்.