உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

135

இவ்வாறு மாதி, இளவரசரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அரச மாதேவியார் தமது மகன் நாடு கடத்தப்படுவதைக் கேள்வியுற்று மன வருத்தம் அடைந்து, தமது மகனைக்காண மூடுவண்டியில் ஏறி இளவரசன் இருக்கும் அரண்மனைக்கு வந்தார். வந்தவர் வெசந்தர குமாரனும் மாதியும் காட்டுக்குப் போவதுபற்றி உரையாடிக் கொண் டிருப்பதைக் கேட்டார். கேட்டுத் தாங் கொணாத் துயரம் அடைந்தார்.

'ஐயோ. வெசந்தரகுமாரனைக் காட்டுக்கு அனுப்புவதா? இதைக் காண்பதைவிட நஞ்சு உண்டு இறப்பது நல்லது. மலை யேறி வீழ்ந்து மாய்வது மேலானது; கழுத்தில் கயிறு கட்டிச் சுருக் கிட்டுச் சாவது சிறந்தது' என்று தமக்குள் கூறிக்கொண்டார். பிறகு, தமது மனத்தில் நிறைந்து கிடக்கும் துயரத்தை அடக்கிக் கொண்டு தமது மகனுக்கும் மருமகளுக்கும் ஆறுதல் வார்த்தை கூறினார்.

பிறகு அரசரிடம் போனார். போய், "நமது அருமை மகனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டால், நகரம் நரகமாக மாறிவிடும் அல்லவா? பெருஞ் செல்வத்தைத் தொலைத்து விட்டு வறுமை யடைந்தவனைப் போலல்லவா துன்பப்பட வேண்டும். நீர் வற்றிப் போன குளத்தில், சிறகுகள் அறுக்கப்பட்ட அன்னப்பறவை துன்புறுவதுபோல அன்றோ மனம் துடிக்கும். நாட்டு மக்கள் சொல்லுகிறார்கள் என்று அருமை மகனைக் காட்டுக்கு அனுப்புவதா? வேண்டாம். அவனைக் காட்டுக்கு அனுப்பவேண்டாம்” என்று அரசனிடம் வருந்தி வேண்டிக்

கொண்டார்.

66

‘குமாரனை நாடு கடத்துவது நான் அல்ல. நாட்டு மக்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களின் தீர்ப்புக்கு உடன்படுவது அரச னாகிய என்னுடைய கடமை. என் கடமையிலிருந்து நான் தவறுவது கூடாது என்று அரசர் பெருமான் விளக்கிக் கூறினார். இதைக்கேட்ட அரசியாரின் மனம் உடைந்துவிட்டது. அவர் வாய்விட்டுக் கதறி அழுதார்.

66

وو

பூத்து மலர்ந்த காடுபோல, கொடிகளை ஏந்திப் பரிவாரமும் சேனையும் சூழ, யானை ஏறி உலாவிவந்த என் மகன் தன்னந் தனியே காட்டுக்குச் செல்வதோ!”