உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

141

பெருமானும் எம்மீது சினங்கொண்டு எம்மை நாடு கடத்திவிட்டார்கள். ஆகவே, வங்கமலைக்குப் போகிறோம். போகும் வழியிலே இங்குத் தங்கினோம். வங்க மலைக்குச் செல்ல எமக்கு வழிகாட்டி யருளுங்கள்.

"வேந்தர் பெருமானே! தாங்கள் இந்த ஊரிலேயே தங்கி இருக் கலாம். தாங்களே இந்த நாட்டை அரசாளலாம்.

66

"தங்களுடைய அன்புக்கு எமது நன்றி. நாடு கடத்தப் பட்டோம். ஆகவே, வங்கமலைக்குச் சென்று அங்குத் தங்கு வோம்.’

“சிவி மன்னருக்குச் செய்தி தெரிவித்துத் தங்களைத் திரும்பி அழைத்துப் போகச் செய்கிறோம்.”

"எம்மைத் திருப்பி அழைக்க அரசர் பெருமானிடம் செய்தி அனுப்ப வேண்டாம். அவர் இதைச்செய்ய உரிமை இல்லாதவர். அரசர் பெருமான் எம்மை மீண்டும் அழைத்தால், நகர மக்கள் அவர் மீது சினங்கொண்டு அவருக்குத் தீங்கு இழைப்பார்கள்.”

66

“அப்படியானால், இந்த நாட்டிலேயே தங்கி இருங்கள். இந்தச் சேதநாடு செழிப்பும் வளப்பமும் உள்ளது. இந்த நாட்டின் அரசாக இருந்து அரசாளுங்கள். இது தங்களுக்குரியது.

“நாடு கடத்தப்பட்டவர் நாடாள்வது முறையன்று. நாம் இங்குத் தங்கினால், எமது சிவி நாட்டு மக்கள் எம்மை ஆதரிக்கும் உங்கள்மீது சினங்கொண்டு பகைமை பாராட்டிக் கலகஞ் செய்வார்கள். எம் பொருட்டு இரண்டு நாடுகளிலும் கலகமும் போரும் ஏற்படுவது கூடாது. உங்கள் அன்புக்கு எமது நன்றி. நாம் வங்கமலைக்குப் போகவேண்டும். வழிகாட்டியருளுங்கள்.

و,

வெசந்தர குமாரன் இவ்வாறு அவர்களின் வேண்டுகோளை மறுத்தார். நகரத்தின் உள்ளே போகவும் மறுத்தார். ஆகவே, அவர்கள் இளவரசர் தங்கியிருந்த மண்டபத்தைச் சூழத் திரைகளை அமைத்து, அவர் தங்கியிருக்க ஆசனங்களும் இருக்கைகளும் செய்து கொடுத்தார்கள். இளவரசர் ஒரு பகலும் ஒரு இரவும் அங்கே தங்கினார். அடுத்த நாள் காலையில் வங்கமலைக்குப் புறப்பட்டார். சேத நாட்டு அரச குமரர்களும் புறப்பட்டு அவரை வழியனுப்ப அவருடன் சென்றார்கள். பதினைந்து யோசனை தூரம் கடந்து சென்று காட்டின் முனையை யடைந்தார்கள். பிறகு வெசந்தர குமரனிடம் விடைபெற்றுத் திரும்பினார்கள். திரும்புவதற்கு முன்பு இவ்வாறு கூறினார்கள்.