உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 11

பட்டவர்களிடம் வங்க மலைக்குச் செல்லும் வழியையும், அது உள்ள தூரத்தையும் கேட்டுக்கொண்டே போனார்கள். வழிப்போக்கர் வழியையும் தூரத்தையும் கூறி, இவர்களுடைய நிலைமைக்கு வருந்தி மன மிளகினார்கள். வழியிலே இருபுறங்களிலும் இருந்த மரங்களில் பூக்களும் காய்களும் இருப்பதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த குழந்தை கள் அவைகளைப் பறித்துத் தரும்படி கேட்டார்கள். பழங்களையும் பூக்களையும் பறித்துக் கொடுத்துக் கொண்டே இருவரும் வழி நடந்தார்கள். நெடுந்தூரம் நடந்து கடைசியில், துன்னி வத்தம் என்னும் கிராமத்தையடைந்தார்கள். மேலும் வழி நடந்து மாலை நேரத்திலே

சேதநாட்டை அடைந்தார்கள்.

இந்தச் சேதநாடு, வெசந்தரகுமரனின் மாமனும், மத்தியின் தந்தையுமான மத்த அரசனுடையது. இவர்கள் நகரத்துக்குள் போகாமல், நகர வாயிலுக்கு வெளியேயுள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார்கள். இளவரசி, வெசந்தரகுமரனின் கால்களைக் கழுவியபின், பாதத்தை வருடிக் கால் வலியை நீக்கினாள். பிறகு, சிவி நாட்டு இளவரசன் வந்திருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதற்காக, நகரத்துப் பெண்கள் பார்வையில் படும்படி மண்டபத்தின் வாயிலின் வெளியே வந்து நின்றாள். இளவரசியைக் கண்டவர்கள், பல்லக்கிலும் தேரிலும் வர வேண்டிய அரசகுமாரி, தனது தந்தையின் நகரத்திற்குக் கால்நடையாக வந்திருப் பதைக் கண்டு வியப்படைந்து இச்செய்தியை அரண்மனையில் தெரி வித்தார்கள்.

அரண்மனையில் இருந்து அரச குமரர்கள் விரைந்து வந்து மண்டபத்திலிருந்த வெசந்தரகுமாரனைக் கண்டு வரவேற்றார்கள். "வருக, வருக, இளவரசரும், அரசர் பெருமானும் நலம்தானே? சிவி நாட்டில் எல்லோரும் சுகந்தானே? பெருமான் அடிகளே, பரிவாரங் களும் பணிவிடையாளரும் இல்லாமல், சிவிகையிலும் தேரிலும் வராமல், யானை சேனைகள் இல்லாமல் ஏன் கால் நடையாகத் தன்னந்தனியே வந்தீர்கள்? பகை அரசர் யாரேனும் வந்து நாட்டைப் பிடித்துக் கொண் டார்களோ?” என்று வருத்தத் துடன் மனங்கலங்கிக் கேட்டார்கள்.

66

“எல்லோரும் நலம். அரசர் பெருமானும், அன்னையாரும், மற்ற எல்லோரும் சுகமாக இருக்கிறார்கள். சிவி நாட்டிற்கு உரியதான, கிடைப்பதற்கு அருமையான, கொற்றத்து யானையை கயிலாய மலை போன்ற அந்தச் சிறந்த வெள்ளை யானையை - நாம் பிராமணர் களுக்குத் தானமாக வழங்கினோம். அதனாலே, நகர மக்களும், அரசர்

"