உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

139

தொடர்ந்து வந்த நண்பர்களையும், நகர மக்களையும் நகரத்துக்குப் போகும்படி அனுப்பிவிட்டு,வண்டியை ஓட்டினார். வண்டி வேகமாகச் சென்றது. அவர், மாதியிடம், "யாரேனும் இரவலர் பின் தொடர்ந்து வரு கிறார்களா பார்?" என்று கூறினார். இளவரசியார், வண்டியில் அமர்ந்த படியே பின்னால் பார்த்தார்.

இளவரசர், நகரத்திலே எழுநூற்றுத் தானம் செய்தபோது, தானம் பெறுவதற்காகத் தூரத்திலிருந்து வந்த நான்கு பிராம ணர்கள், அந்நாளில் நகரத்துக்கு வந்து தானம் பெற முடிய வில்லை. அவர்கள் நகரத்துக்கு வந்து இளவரசர் காட்டுக்குப் போய்விட்டதைக் கேள்வியுற்று, “அரச குமரன் எதையேனும் கொண்டுபோனாரா, வெறுங்கையோடு போனாரா?” என்று கேட்டார்கள். வண்டியில் ஏறிக்கொண்டு போனார் என்று சொல்லக் கேட்டு, அப்பிராமணர்கள் விரைந்து அவரைப் பின் தொடர்ந்தார்கள். தேரில் பூட்டியுள்ள நான்கு குதிரைகளையும் தானம் பெறவேண்டும் என்று கருதியே அவர்கள் அரசகுமரனைப் பின் தொடர்ந்து விரைவாக வந்தார்கள்.

அவர்கள் வருவதைக்கண்ட மாதி, “இரவலர் வருகிறார்கள் என்று கூறினார். உடனே இளவரசர் தேரை நிறுத்தினார். பிராமணர் வந்து தேரில் பூட்டியுள்ள குதிரைகளைத் தானமாகக் கொடுக்கும்படி கேட்டார்கள். அரசகுமரன், தேரில் பூட்டியிருந்த நான்கு குதிரை களையும் அவிழ்த்து ஆளுக்கு ஒவ்வொரு குதிரையைத் தானமாகக் கொடுத்தார். பிராமணர் நால்வரும் குதிரைகளை ஓட்டிக்கொண்டு போனார்கள். அவ்வமயம் இன்னொரு பிராமணன் அங்கு வந்து, வண்டியைத் தானமாகக் கொடுக்கும்படி இரந்து வேண்டினான். வெசந்தர குமாரன், வண்டியில் அமர்ந்திருந்த தமது மனைவியையும் மக்களையும் கீழே இறக்கிவிட்டு, வண்டியை அவனுக்குத் தானமாக வழங்கினார்.

பிறகு, அவர்கள் கால்நடையாகவே நடந்து போனார்கள். மத்தி, ளைய குழந்தையாகிய கணாஜினாவைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். இளவரசன் மூத்த மகனாகிய ஜாலியை தூக்கிக்கொண்டார். குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு இருவரும் பேசிக்கொண்டே கால் நடையாக வழிநடந்தார்கள். அரண்மனையின் இனிய வாழ்க்கையை யும் சுகபோகங்களையும் இழந்துவிட்டோமே என்னும் எண்ணம் அவர்களுக்குச் சிறிதும் இல்லாமல், மகிழ்ச்சியோடு நடந்தார்கள். எதிர்ப்

6