உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - புத்தர் ஜாதகக் கதைகள்

145

அந்தக் காலத்திலே கலிங்க தேசத்திலே துன்னி விட்டம் என்னும் கிராமத்திலே பிராமணர் வசித்து வந்தனர். அவர்களில் ஜூஜூகன் என்னும் ஏழைப் பிராமணன் ஒருவன் பிச்சை எடுத்து இரந்து உண்டு வாழ்ந்திருந்தான். பிச்சை எடுத்துச் சிறிது சிறிதாக அவன் நூறு காணம் சேர்த்தான். அதை அவன் அடுத்த கிராமத் தில் ஒரு பிராமணனிடம் கொடுத்துவிட்டு அயலூருக்குப் போனான். போனவன் நெடுங் காலமாகத் திரும்பி வரவில்லை. அந்தப் பிராமணன் நூறு காணத்தை யும் தன் குடும்பத்துக்குச் செலவு செய்துவிட்டான். நெடுங்காலத்திற்குப் பிறகு ஜூஜூகன் திருப்பி வந்து காணத்தைக் கேட்டான். பிராமணன். காணத்தைத் திரும்பிக் கொடுக்கமுடியாமல் தன் மகளாகிய அமித்ததாவனை என்பவளை அவனுக்குக் கொடுத்தான். அவளை அழைத்துக் கொண்டு ஜூஜூகன், துன்னிவிட்டம் என்னும் தன் கிராமத்துக்கு வந்து தங்கினான்.

அமித்ததாவனை, தன் கணவனாகிய ஜூஜகனுக்குப் பணி விடைகள் செய்து கொண்டிருந்தாள். அதனைக்கண்ட அக் கிராமத்துப் பிராமணர்கள், தம் மனைவிமாரிடம் அவளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள், “அவளைப் பாருங்கடி. அந்தக் கிழ அகம்படியானுக்கு அவள் எவ்வளவு பணிவிடை செய்கிறாள்! உங்களுடைய வாலிப அக முடையான்களுக்கு நீங்கள் பணிவிடை செய்வதில்லையே” என்று அவர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டினார்கள். இப்படிப் பேசுவது, அந்த இளம் பார்ப்பனிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அமித்ததா வனையை அந்தக் கிராமத்திலிருந்து ஓட்டிவிட வேண்டும் என்று எண்ணினார்கள். ஆகவே, ஆற்றங்கரையிலும் மற்ற இடங்களிலும் அமித்ததாவனையைப் பற்றி அவள் காதில்படும்படி பலவாறு பேசத்தொடங்கினார்கள்.

“என்ன அநியாயம் பாருங்கோ மாமி! இளம் பெண்ணை அந்தக் கிழவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்களே! இந்தக் கிழடுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க இவள் அம்மா எப்படி மனம் ஒப்பி னாளோ? அவள் அப்பாவும் அம்மாவும் இவளுக்கு விரோதிகளோ இப்படிச் செய்ய? இருந்தாலும் இவளுடைய மனுஷர்கள் மகா கொடிய வர்கள். கிழப் பிராமணனைக் கட்டிக் கொண்டு வாழ்வதைவிட எங்கே யாகிலும் குளம் குட்டையில் விழுந்து சாகலாம். கிளிபோல அழகாக இருக்கிற இந்த இளம் பெண்ணுக்கு லோகத்திலே ஒரு வாலிபப்